பல பெண்கள் தொடர்பு விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட இமாம் உல் ஹக்!
உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்லாமல் லீக் போட்டி உடன் வெளியேறியது. இதனால் பாகிஸ்தான் ரசிகர்கள் அணியின் மீதும் பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் மீது கடுமையாக விமர்சனம் செய்தனர்.
உலகக்கோப்பையில் பாகிஸ்தான் வெளியேறினாலும் அணியின் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் சில போட்டிகளில் தனது அதிரடியை ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.இவர் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் மருமகன்.இமாம் உல் ஹக் பல பெண்களுடன் தொடர்பு வைத்து இருந்தது தெரியவந்தது.
சமீபத்தில் இமாம் உல் ஹக் பல பெண்களுடன் சாட்டிங் செய்த ஸ்கீரின் ஷாட்கள் இணை தளத்தில் வைரலானது.மேலும் இளம் பெண் ஒருவர் இமாம் தனக்கு அனுப்பிய மெசேஜ்களை மீ டூ ஹேஷ் டேக்குடன் ட்விட்டரில் பதிவிட்டார்.
இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய இயக்குனர் வாசிம் கான் ,இமாம் உல் ஹக் விசாரணை நடத்தினார்.அப்போது இமாம் உல் ஹக் மன்னிப்பு கேட்டதாக வாசிம் கான் கூறினார்.
இமாம் தனிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் வீரர்கள் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என நம்புகிறோம். நாட்டுக்காக விளையாடும் போது அவர்களுக்கு அதிக பொறுப்பு உள்ளது. இனி இதுபோன்ற தவறுகள் நடக்காது என வாசிம் கான் கூறினார்