எனது தாயின் தோள்களில்தான் நான் நின்றுகொண்டிருக்கிறேன்.
அமெரிக்காவில், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடனும், துணை அதிபர் வேட்பாளராக இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸை முறைப்படி அறிமுகம் செய்தல் நிகழ்ச்சி காணொலி மூலம் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பேசிய கமலா ஹாரிஸ், ஜனநாயகக் கட்சி என்னை துணை அதிபர் வேட்பாளராக அறிவித்ததை நான் ஏற்கிறேன். இந்த அறிவிப்பை நான் அனைத்து கறுப்பினப் பெண்களின் உரிமைக்காக போராடும் பெண்களுக்காக சமர்பிக்கிறேன் என்றும், இனிமேல் தீர்மானத்துடன் போரிடுவோம், நம்பிக்கையுடன் போரிடுவோம், ஒருவொருக்குள் பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்திக்கொண்டு உறுதியுடன் போராடுவோம் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இந்தியாவி்ன் குறிப்பாக தமிழகத்தில் இருந்து அமெரி்க்கா வந்த எனது தாய் ஷியாமலா குறித்து நினைவு கூற வேண்டும். எனது தாய் ஷியாமலா, எனது 19 வயதில் மருத்துவப் படிப்புக்காக அமெரிக்கா வந்தவர். அவரின் தோள்களில்தான் நான் நின்றுகொண்டிருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
அவர் ஜோ பிடன் குறித்து பேசுகையில், நாம் சிறந்த அதிபராக ஜோ பிடனைத் தேர்வு செய்ய வேண்டும் என்றும், ஜோ பிடன் துணை அதிபராகஇருந்தபோதிருந்து அவரை எனக்குத் தெரியும் என்றும், நான் பிரச்சாரம் செய்தபோது பிடனைச் சந்தித்துள்ளேன் என்றும், எனக்கு முதன்முதலில் என்னுடைய தோழியின் தந்தை என்றுதான் ஜோ பிடன் அறிமுகமானார் என தெரிவித்துள்ளார்.
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…