நான் இப்போ காலேஜ் முடிச்ச பீலிங்ல இருக்கேன்.! திருமணம் குறித்து யோசிக்கவேயில்லை.! – பிக்பாஸ் பாலா.!

Default Image

திருமணம் குறித்த கேள்விக்கு பிக்பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ் பதிலளித்துள்ளார். 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றியை பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ். இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ளது. இதில் 4- வது சீசனில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ். இந்த நிகழ்ச்சியில் மூலம் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது. இதனை, தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக பாலாஜி முருகதாஸ் காத்துள்ளார்.

இந்நிலையில் பாலாஜி முருகதாஸ் தனது இன்ஸ்டாகிராம் மூலமாக ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். அப்போது ரசிகர் ஒருவர் உங்களின் திருமணம் குறித்து எதாவது திட்டமுள்ளதா.? என்று கேட்டார். அதற்கு பதிலளித்த பாலாஜி முருகதாஸ் எல்லோரும் இதை தான் கேட்கிறார்கள், நான் இப்போ தான் காலேஜ் முடிச்ச கவலையில் இருக்கேன். இன்னும் சில வருடங்களுக்கு நான் திருமணம் குறித்து யோசிக்க விரும்பவில்லை” என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்