நான் இந்த மாத்திரையை தான் சாப்பிடுகிறேன், என்னை ஒன்னும் செய்யவில்லை – அதிபர் ட்ரம்ப்

Published by
பாலா கலியமூர்த்தி

நான் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளை ஒன்றரை வார காலமாக தினமும் எடுத்து வருகிறேன். ஆனால் என்னை இந்த மாத்திரைகள் எதும் செய்யவில்லை என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.

உலக முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரசுக்கு இதுவரை எந்த தடுப்பு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கான முயற்சியில் வல்லுநர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, இந்தியாவில் மலேரியா காய்ச்சலுக்கு தயாரிக்கக்கூடிய ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள், கொரோனா வைரஸ்களை கொல்வதாக தகவல்கள் வெளிவந்தன. இதனை அத்திப்பார் டிரம்பும் பரிந்துரைத்தார். பின்னர் அதிபர் ட்ரம்ப், இந்தியா இந்த மாத்திரைள் மீதான ஏற்றுமதி தடையை நீக்கி அனுப்பி வைக்கும்படி கேட்டார். அதன்படி, அந்த மாத்திரைகள் மீதான ஏற்றுமதி தடையை நீக்கி, இந்தியா ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தது.

இதனைத்தொடர்ந்து ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரை கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு வேலை செய்வதில்லை என்றும் இந்த மாத்திரைகளை கொடுத்தும் பலர் உயிரிழந்துள்ளனர் என ஆய்வு தகவல்கள் வெளிவந்தன. ஆனால், அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் இந்த மாத்திரைகள் கொரோனாவுக்கு நல்ல பலன் அளிக்கிறது என்று நம்புகிறார். இந்த நிலையில், வாசிங்டன் உள்ள வெள்ளை மாளிகை அதிகாரிகள் சிலருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அதிபர் டிரம்புக்கு தினந்தோறும் கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்படுகிறது. 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ட்ரம்ப், நான் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளை ஒன்றரை வார காலமாக தினமும் எடுத்து வருகிறேன். அத்துடன் சேர்த்து துத்தநாக சப்ளிமென்டும் எடுத்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இந்த மருந்துகளை எடுத்துக்கொள்ளுமாரி மருத்துவர்கள் என்னிடம் பரிந்துரை செய்யவில்லை. ஆனால், நான் இந்த மாத்திரைகளை வழங்குமாறு வெள்ளை மாளிகை மருத்துவர்களிடம் கேட்டுக்கொண்டேன். அதை எடுத்துக்கொள்ளவும் செய்கிறேன். இது நல்லது என்று கருதியே சாப்பிட்டு வருகிறேன். 

இந்த ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரை பற்றி பல நல்ல தகவல்களை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இதனால் இந்த மாத்திரைகளை எடுத்துக்கொண்டு நான் நன்றாகத்தான் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். ஆனால் இந்த மாத்திரைகளை கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளுக்கு கொடுத்தால் மரணம் உள்ளிட்ட மோசமான பக்க விளைவுகள் ஏற்படும் என்று அமெரிக்க உணவு, மருந்து நிர்வாகம் (எப்.டி.ஏ.) எச்சரித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

12 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

18 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

18 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

18 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

18 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

18 hours ago