நான் இந்த மாத்திரையை தான் சாப்பிடுகிறேன், என்னை ஒன்னும் செய்யவில்லை – அதிபர் ட்ரம்ப்

நான் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளை ஒன்றரை வார காலமாக தினமும் எடுத்து வருகிறேன். ஆனால் என்னை இந்த மாத்திரைகள் எதும் செய்யவில்லை என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.
உலக முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரசுக்கு இதுவரை எந்த தடுப்பு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கான முயற்சியில் வல்லுநர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, இந்தியாவில் மலேரியா காய்ச்சலுக்கு தயாரிக்கக்கூடிய ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள், கொரோனா வைரஸ்களை கொல்வதாக தகவல்கள் வெளிவந்தன. இதனை அத்திப்பார் டிரம்பும் பரிந்துரைத்தார். பின்னர் அதிபர் ட்ரம்ப், இந்தியா இந்த மாத்திரைள் மீதான ஏற்றுமதி தடையை நீக்கி அனுப்பி வைக்கும்படி கேட்டார். அதன்படி, அந்த மாத்திரைகள் மீதான ஏற்றுமதி தடையை நீக்கி, இந்தியா ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தது.
இதனைத்தொடர்ந்து ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரை கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு வேலை செய்வதில்லை என்றும் இந்த மாத்திரைகளை கொடுத்தும் பலர் உயிரிழந்துள்ளனர் என ஆய்வு தகவல்கள் வெளிவந்தன. ஆனால், அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் இந்த மாத்திரைகள் கொரோனாவுக்கு நல்ல பலன் அளிக்கிறது என்று நம்புகிறார். இந்த நிலையில், வாசிங்டன் உள்ள வெள்ளை மாளிகை அதிகாரிகள் சிலருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அதிபர் டிரம்புக்கு தினந்தோறும் கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்படுகிறது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ட்ரம்ப், நான் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளை ஒன்றரை வார காலமாக தினமும் எடுத்து வருகிறேன். அத்துடன் சேர்த்து துத்தநாக சப்ளிமென்டும் எடுத்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இந்த மருந்துகளை எடுத்துக்கொள்ளுமாரி மருத்துவர்கள் என்னிடம் பரிந்துரை செய்யவில்லை. ஆனால், நான் இந்த மாத்திரைகளை வழங்குமாறு வெள்ளை மாளிகை மருத்துவர்களிடம் கேட்டுக்கொண்டேன். அதை எடுத்துக்கொள்ளவும் செய்கிறேன். இது நல்லது என்று கருதியே சாப்பிட்டு வருகிறேன்.
இந்த ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரை பற்றி பல நல்ல தகவல்களை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இதனால் இந்த மாத்திரைகளை எடுத்துக்கொண்டு நான் நன்றாகத்தான் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். ஆனால் இந்த மாத்திரைகளை கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளுக்கு கொடுத்தால் மரணம் உள்ளிட்ட மோசமான பக்க விளைவுகள் ஏற்படும் என்று அமெரிக்க உணவு, மருந்து நிர்வாகம் (எப்.டி.ஏ.) எச்சரித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025