ரூ.83,000 கோடி வரி செலுத்த உள்ளேன் – எலான் மஸ்க் ட்வீட்!
சுமார் ரூ.83,000 கோடி வருமான வரி செலுத்த உள்ளதாக அறிவித்த பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்.
தொழிலதிபர் எலான் மஸ்க் இந்த ஆண்டு 11 பில்லியன் டாலர் (சுமார் ரூ.83,000 கோடி) வரி செலுத்த உள்ளதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த வரி தொகையை அவர் செலுத்தும் பட்சத்தில் அமெரிக்காவில் ஒரு தனி நபர் செலுத்திய அதிகபட்ச வரியாக அது இருக்கும் என கூறப்படுகிறது.
எலான் மஸ்க் தனது முதல் Zip2 நிறுவனத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ், நியூராலிங்க வரையில் மிகப்பெரிய வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறார். எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா 2021ஆம் ஆண்டில் வர்த்தகம், வருமானம், சந்தை ஆதிக்கம், பங்கு மதிப்பு என மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது.
இந்த நிலையில், ஜனநாயக கட்சியின் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரான எலிசபெத் வாரன் தனது டிவிட்டர் பக்கத்தில் எலான் மஸ்க் அதிக வரி செலுத்த வேண்டும் என தெரிவித்திருந்தார். இதற்கு எலான் மஸ்க் அமெரிக்க வரலாற்றில் ஒரு வருடத்தில் அதிக வருமான வரி செலுத்த உள்ளேன் பதிலளித்திருந்தார்.
வரி கட்டுவது தொடர்பாக அடிக்கடி விமர்சனத்தில் சிக்கும் எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், இந்த ஆண்டு நான் 11 பில்லியன் டாலர் அளவிலான வருமான வரி செலுத்துகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
For those wondering, I will pay over $11 billion in taxes this year
— Elon Musk (@elonmusk) December 20, 2021