இளையராஜா தன்னை பிரசாத் ஸ்டுடியோவில் இருந்து வெளியேற்றியதற்காக ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க கோரி பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளர்கள் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இசைஞானி இளையராஜா சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் தான் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக பல திரைப்படங்களுக்கு இசையமைத்திருந்தார்.சமீபத்தில் ஸ்டுடியோவின் உரிமையாளர்கள் இளையராஜாவை வெளியேற்றியதுடன் ,தனது இசை குறிப்புகளை சேதப்படுத்தியதாக கூறி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது இளையராஜா அவர்கள் பிரசாத் ஸ்டுடியோவில் இருந்து தனக்கு சொந்தமான பொருட்களை கூட எடுக்க விடாமல் வெளியேற்றயது நியாயமில்லை எனவும் , இதனால் தான் மன உளைச்சலுக்கு ஆளாகியதாகவும் ,எனவே தன்னை ஸ்டுடியோவில் இருந்து வெளியேற்றியதற்காக ரூ.50 லட்சம் இழப்பீட்டு தொகையை ஸ்டுடியோ உரிமையாளர்களான சாய் பிரசாத் மற்றும் ரமேஷ் ஆகியோருக்கு உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் .மேலும் பிரசாத் ஸ்டுடியோ தன் வசமுள்ள ஒலிப்பதிவு அரங்கில் தலையிடவும் தடை விதித்து வேண்டும் என்றும் மனுவில் கோரியுள்ளார் .
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது ,பிரசாத் ஸ்டுடியோ இந்த மனு தொடர்பாக பதிலளிக்க கோரி நோட்டீஸ் அனுப்புமாறு உத்திரவிடப்பட்டுள்ளது
ஏலான் மஸ்க் எப்போதுமே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் எதாவது பதிவு ஒன்றை வெளியிட்டு பயனர்களுடன் கலகலப்பாக பேசுவதை வழக்கமான…
டெல்லி : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பிறந்தநாள் வரும் 27-ம்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச்-15ம் தேதி தொடங்கி, மே-25ம் தேதி நிறைவடையவுள்ளது. 2 மாதம்…
பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை…