இளையராஜா கோடம்பாக்கத்தில் புதியதாக ஒரு இடத்தை வாங்கி அங்கு ஸ்டூடியோ கட்டிய நிலையில், இன்று ஸ்டூடியோ திறக்கப்பட்டுள்ளது.
பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் , இசையமைப்பாளர் இளையராஜாவை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்டூடியோவில் இருந்து காலி செய்யுமாறு தெரிவித்தது. அதன்படி இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்ற நிலையில், ஸ்டூடியோவில் இளையராஜாவை அனுமதிக்காமல் ஸ்டுடியோ நிர்வாகம் அவரை வெளியேற்றியது.
இந்நிலையில் இளையராஜா கோடம்பாக்கத்தில் புதியதாக ஒரு இடத்தை வாங்கி அங்கு ஸ்டூடியோ கட்டும் பணிகளை மேற்கொண்டார். இதனையடுத்து இன்று இந்த ஸ்டூடியோ திறக்கப்பட்ட நிலையில், புதிய ஸ்டுடியோவில் பணிகளை தொடங்கியுள்ளார். ஸ்டுடியோவின் முழு வேலையும் முடிவடையவில்லை. பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வந்ததற்கு வருத்தம் இல்லை. எல்லாம் சவால் தான் எவ்வளவோ இடைஞ்சல்கள் வரும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் இளையராஜாவின் புதிய ஸ்டுடியோ விஜய் சேதுபதி வெற்றிமாறன் ஆகியோர் வருகை தந்தனர். இளையராஜா தனது புதிய ஸ்டூடியோவில் , வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படத்துக்கு இசை அமைக்கும் பணிகளை இன்று தொடங்கியுள்ளார்.
துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…
சென்னை : தனுஷின் 'துள்ளுவதோ இளமை', தாஸ், என்றென்றும் புன்னகை போன்ற பல படங்களிலும், பல முன்னணி விளம்பரங்களிலும் நடித்துள்ள…
சென்னை : காலையில் குறைந்த தங்கத்தின் விலை மதியம் உயர்ந்துள்ளது. காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்த நிலையில் 3…
சென்னை : மும்மொழி கொள்கை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில், மூன்றாவது மொழி ஏதேனும் என குறிப்பிட்டு மத்திய…