இளையராஜா தொடர்ந்த வழக்கை சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இசையமைப்பாளர் இளையராஜா தனது இசைப்பயணத்தை ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்து சுமார் 41 ஆண்டுகளாக தன்னுடைய இசை கோர்ப்புகளுக்கான பணிகளை சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் செய்து வந்தார்.
ஆனால் பிரசாத் ஸ்டுடியோவின் தற்போதைய உரிமையாளர் ( பிரசாத் அவர்களின் பேரன்) அந்த இடத்தை விட்டு இளையராஜாவை காலி செய்ய கூறினார்.பின்பு இளையராஜா தரப்பு மறுப்பு தெரிவித்து, அதற்கு வாடகை தருவதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு பிரசாத் ஸ்டூடியோ தரப்பு மறுப்பு தெரிவித்தது.
இந்த நிலையில் தான் இந்த விவகாரம் தொடர்பாக சிட்டி சிவில் நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்தார்.ஆனால் அந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருந்த நிலையில் வழக்கை விரைந்து முடிக்க சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார் இளையராஜா.
இந்த வழக்கை இன்று சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது.அப்பொழுது ,இளையராஜா மற்றும் பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் இடையே உள்ள பிரச்சினை தொடர்பாக சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…