இளையராஜாவுக்கு பிரசாந்த் ஸ்டுடியோவில் ஒரு நாள் தியானம் செய்யவும், உடமைகளை எடுத்து செல்லவும் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பிரசாந்த் ஸ்டூடியோவுக்கு சென்று தனது சொந்தமான பொருட்களை எடுத்து வர அனுமதி அளிக்க வேண்டும் என இளைஞரான தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு குறித்து விசாரித்த நீதிமன்றம், இளையராஜாவை ஒரு நாள் ஸ்டூடியோவுக்குள் பொருட்களை எடுப்பதற்கு அனுமதிப்பதில் என்ன பிரச்சனை என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. இந்த கேள்விக்கு ஸ்டுடியோ நிர்வாகம் இளையராஜாவை அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தது.
மேலும், இளையராஜாவும் அவரும் உதவியாளர்கள், காவல்துறையினர் மற்றும் அவரது வழக்கறிஞர் ஆணையர் ஆகியோரை ஸ்டுடியோவிற்குள் அனுமதிக்கலாமா?என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு பதிலளித்த ஸ்டுடியோ நிர்வாகம், தங்களுக்கு எதிராக போடப்பட்ட வழக்குகளை இளையராஜா அவர்கள் வாபஸ் பெறுவதாக தெரிவித்தால், அவரை அனுமதிக்கலாம் என பிரசாந்த் ஸ்டுடியோ நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, பிரசாத் ஸ்டூடியோவில் எந்த ஒரு உரிமையும் கோர மாட்டேன் என்றும், பிரசாத் ஸ்டுடியோவுக்கு எதிராக போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவதாகவும் இளையராஜா மனு அளித்துள்ளார். இதனையடுத்து, பிரசாந்த் ஸ்டுடியோவில் ஒரு நாள் தியானம் செய்யவும், உடமைகளை எடுத்து செல்லவும் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மேலும், பிரசாந்த் ஸ்டுடியோவுக்குள் செல்லும் இளையராஜாவுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…