இளநரையை மறைய செய்யும் பீர்க்கங்காய்….!!!
இன்றைய சமுதாயத்தில் மிக சிறிய குழந்தைகளுக்கு கூட இளநரை உள்ளது. இதுபோக்குவதற்கு பல வழிகளில் முயன்று கூட விடுதலை இல்லாமல் கஷ்டப்படுவோரும் உண்டு, இதற்காக அதிகமான பணம் செலவு பண்ணினோரும் உண்டு, ஆனாலும் அதில் இருந்து மாற்றம் இல்லை.
பீர்க்கங்காய் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வெயிலில் நன்றாக உலர்த்தி பின் போடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியை சாதம் வடித்த காஞ்சியில் கலந்து தலையில் தொடர்ந்து தேய்த்து குளித்து வந்தால் இளநரை மறையும்.