இசைஞானி இளையராஜா – பிரசாத் ஸ்டூடியோ இட பிரச்னை! நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு!
இசைஞானி இளையராஜா தனது திரை பயணத்தில் சுமார் 40 வருடங்களுக்கு மேலாக பிரசாத் ஸ்டூடியோவில் அவருக்கென உள்ள அந்த அறையில் தான் தனது இசை கோர்ப்பு பணிகளை செய்து வந்தார். இந்த பிரசாத் ஸ்டூடியோ இளையராஜாவுக்கு சொந்தமானது அல்ல. அது பிரசாத் அவர்களின் குடும்பத்திற்கு சொந்தமானது.
இந்நிலையில் பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து இளையராஜா தங்கள் அறையை காலி செய்து தரவேண்டும் எனவும் அதில் வேறு பணிகள் நடைபெற உள்ளது எனவும் பிரசாத் ஸ்டூடியோ தரப்பில் கூறப்பட்டது. இதனால் இளையராஜா தரப்பிற்கும் பிரசாத் ஸ்டூடியோ தரப்பிற்கும் பிரச்சனை ஏற்பட்டது. அதில், பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சில நாட்களுக்கு முன் இளையராஜாவுக்கு ஆதரவாக தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, சீமான் உள்ளிட்டோர் பிரசாத் ஸ்டூடியோ சென்றனர் அப்போது அவர்களை பிரசாத் ஸ்டூடியவிற்கு செல்ல விடாமல் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அதன்பிறகு இளையராஜா தரப்பில் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டது. இதில் பதிலளித்த சென்னை உயர்நீதிமன்றம் வரும் 9ம் தேதி இருதரப்பையும் நீதிமன்றத்திற்கு அழைத்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளது.
வரும் 13ம் தேதி இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணை சமரச பேச்சுவார்த்தையை அடுத்து நீதிமன்ற விசாரணை தொடங்கும் என தற்போது தகவல் வெளியாகி உள்ளது.