நீங்கள் நிம்மதியாக தூங்க வேண்டுமென்றால் இதை செய்யாமல் இருப்பது நல்லது…! பைடனுக்கு எச்சரிக்கை விடுக்கும் வடகொரியா..!

Default Image

அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு நீங்கள் நன்றாக தூங்கு விரும்பினால், தொடக்கத்திலிருந்தே அதற்கான வேலையை உருவாக்காமல் இருப்பது நல்லது. 

அமெரிக்க அதிபர் பைடனின் நிர்வாக  அதிகாரிகள்,  பென்டகன் தலைவர் லாயிட் ஆஸ்டின் மற்றும் வெளியுறவுத்துறை செயலர் அந்தோணி பிலிங்கன் ஆகியோர் தமது அமெரிக்காவின் நட்பு நாடான ஜப்பானின் டோக்கியோ மற்றும் தென் கொரியாவின் சியோலுக்கு முதல் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

அமெரிக்க அதிகாரிகளின் இந்த பயணமானது சீனாவுக்கு எதிராக ராணுவ கூட்டணிகளை அணிதிரட்டவும், ஆயுதமேந்திய வடகொரியாவுக்கு எதிராக ஒரு  அணியை உறுதிப்படுத்தும் நோக்கமாகக் கொண்டது என்று கூறப்படுகிறது. அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் பதவியேற்று நான்கு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், வடகொரியாவின் அதிபர் கிம் ஜோங் உன்னின் முக்கிய ஆலோசகரான கிம் யோ ஜோங், ஜோ பைடன் பற்றி முதல்முறையாக வெளிப்படையான கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து வட கொரிய தலைநகர்  பியோங்யாங்கின் அதிகாரப்பூர்வ  ரோடோங்  செய்தித்தாளில் அறிக்கை வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில், ‘எங்கள் நிலத்தில் துப்பாக்கியின் வாசனை பரப்ப போராடும் ,அமெரிக்காவின் புதிய நிர்வாகத்திற்கு ஓர் அறிவுரை. அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு நீங்கள் நன்றாக தூங்கு விரும்பினால், தொடக்கத்திலிருந்தே அதற்கான வேலையை உருவாக்காமல் இருப்பது நல்லது. அவ்வாறு செய்தால் அது உங்களின் தூக்கத்தை கெடுக்கும்.’ என்று கிம் யோ ஜோங்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்