கமலஹாசன் புதிதாக கட்சியில் இணைந்தவர். அவருக்கு என்ன தெரியும். பிக்பாஸ் நடத்துகிறவர் எல்லாம் அரசியல் செய்தால் எப்படி இருக்கும்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது நடிகர் கமலஹாசனை குறித்து விமர்சித்துப் பேசியுள்ளார். அவர் பேசுகையில், தவறுகள் நடைபெறாத வண்ணம் தமிழக அரசு சிறப்பான முறையில் தான் மக்களை நடத்த வேண்டும் என்று நினைக்கிறது. கமலஹாசன் புதிதாக கட்சியில் இணைந்தவர். அவருக்கு என்ன தெரியும். பிக்பாஸ் நடத்துகிறவர் எல்லாம் அரசியல் செய்தால் எப்படி இருக்கும். வீட்டில் இருக்கும் ஒரு குடும்பம் கூட இதனால் நன்றாக இருக்காது.
இப்படிப்பட்ட தலைவர்கள் சொல்கின்ற கருத்துக்களை நீங்கள் சொல்லலாமா? என செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினார். மேலும் அவர் கூறுகையில், கமலஹாசன் நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பவர் அல்ல. நன்றாக இருக்கும் குடும்பத்தை கெடுப்பது தான் அவருடைய வேலை. ஏனென்றால் அந்த டிவி தொடர் பார்த்தால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கெட்டுப் போய்விடுவார்கள். புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் பாடல்கள் அருமையான பாடல்கள் அது மக்களுக்கு நன்மை பயக்கும் பாடல்கள். ஆனால், இன்று கமலஹாசன் நடித்த படங்களை பார்த்தால் அதோடு அந்த குடும்பம் காலியாகி விடும் என விமர்சித்துள்ளார்.
அமெரிக்கா : அதிபரைத் தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று அமெரிக்காவின் அதிபரானார்.…
அரியலூர் : இன்று (நவம்பர் 6) புதன்கிழமை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தின் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…
ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…