இந்த மாதிரி அறிகுறிகள் இருந்தால் நீங்கள் தப்பான நபரை கல்யாணம் செய்துள்ளீர்கள்!

Default Image

திருமணமான புதிசில் கணவன், மனைவி இருவருமே காதல் நினைவில் இருப்பார்கள். அவர்கள் கண்களால் பார்ப்பதை விட வாழ்க்கையில் பல முக்கியமான விஷயங்கள் உள்ளன என்பது தெரிய அவர்களுக்கு அதிக காலம் தேவைப்படுவதில்லை. இது காதல் திருமணம், நிச்சயித்த திருமணம் இரண்டிற்கும் பொருந்தும். நீங்கள் தவறான துணையை திருமணம் செய்துள்ளீர்கள் என்பதை முதலில் கண்டறிவது உங்கள் வாழ்க்கைக்கு நல்லது.
திருமணம் ஆன தம்பதிகளுக்குள் வாக்குவாதங்கள், சண்டைகள் ஏற்படுவது சகஜமான ஒன்று தான் வரவில்லை எனறால் தான் தப்பு. அதற்காக உங்கள் துணையை விட்டு நீங்கள் விலக வேண்டும் என்று நினைப்பது அதிக முட்டாள்த்தனம். ஆனால் நீங்கள் தவறான நபரை திருமணம் செய்து கொண்டுள்ளீர்கள் என்று தெரிந்தால் உடனடியாக அந்த துணையிடம் இருந்து வெளியேறுவது நல்லது.
எப்போதும் சோகமாக இப்ருப்பது இல்லாமல் எபோதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் ஆசை ஆனால் சூழ்நிலை அப்படி இல்லை என்பதுதான் பச்சையான உண்மை. சோகமாக இருப்பது அல்லது மகிழ்ச்சியின்றி இருப்பது சாதாரண விஷயம் இல்லை ஆனால் நீங்கள் திருமணம் செய்து கொண்ட பிறகும் உங்கள் துணையால் உங்களுக்கு எந்த மகிழ்ச்சியும் ஏற்படவில்லை என்றால் அது கண்டிப்பா கவலைப்பட வேண்டிய விஷயம் என்று தான் சொல்ல வேண்டும்.
ஒரு நாளை கடத்துவது என்பதே உங்களுக்கு கடினமான ஒன்றாக இருக்கலாம்.அப்படியாக இருந்தால் உங்கள் பிரச்சினைக்கான காரணம் உங்களின் வாழ்க்கைத்துணைதான். சண்டைகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் சகஜமாவது நீங்களும் உங்கள் துணையின் கையில் தான் இருக்கிறது, ஒருவருக்கொருவர் விட்டு கொடுக்கும் குணம் கொண்டவராக மாறுங்கள் தானாக சரியாகிவிடும். சண்டைகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் ஒரு உறவின் மிகவும் பொதுவான அம்சங்களாக இருந்தாலும், அது தினமும் நடந்தால் அது நிச்சயமாக கவலைக்குரிய ஒரு காரணமாகும்.
போக போக இது மிகவும் மோசமானதாக மாறும், மாதிரி நடக்கும் போது நீங்களே உணர்வீர்கள். உங்கள் திருமணத்தில் உங்களுக்கு அதிகமான அடிகள் விழுந்தால் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் மனப்பொருத்தம் இல்லை என்று அர்த்தம். நீங்கள் சண்டைகளை தவிர்க்க நினைச்சாலும் சண்டை வந்தால் உங்கள் துணை மீதுதான் தவறு.குறிப்பாக ஒரு திருமணத்தில், நிதி, வேலை வெற்றி அல்லது நீண்ட கால திட்டங்கள் போன்ற கவனம் தேவைப்படும் இது போன்ற பல விஷயங்கள் உள்ளன.
நாம் அனைவரும் உணர்ச்சிவசப்பட்ட மனிதர்கள், எல்லா விசியத்திலும் அன்பை தேடுகிறோம். இருந்தாலும் நீங்கள் திருமணமாகி உங்கள் துணையைத் தவிர இனொருவரிடம் அன்பை நாடுகிறீர்கள் என்றால், நீங்கள் என்ன குழப்பத்தில் இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கேத் தெரியும். இந்த நினைப்பு வந்துவிட்டால் உங்கள் துணை சரி இல்லை என்பதே தெரிந்து கொள்ளுங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்