மூன்றாவது குழந்தை பெற்றுக் கொண்டால் சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்க வேண்டும் – நடிகை கங்கனா ராணவத்

Published by
லீனா

மூன்றாவது குழந்தையை பெறுபவர்களுக்கு சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்க வேண்டும்.

பிரபல நடிகையான கங்கனா ரனவத் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் விதமாக கூறியுள்ள கருத்து தற்போது பேசும் பொருளாகி உள்ளது. ஆதாவது மூன்றாவது குழந்தையை பெறுபவர்களுக்கு சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்துக்கு சலோனி கவுர் என்ற நகைச்சுவை நடிகை நடிகை கங்கனா ராணவத்துக்கு உடன் பிறந்தவர்கள் ஒரு சகோதரர், ஒரு சகோதரி என மூன்று பேர் என கிண்டலாக பதிவிட்டிருந்தார்.

இந்த நடிகையின் கருத்துக்கு, கங்கணா ராணவத் பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘என்னுடைய தாத்தா உடன் பிறந்தவர்கள் மொத்தம் 8 பேர். அந்த காலத்தில் அதிகமான குழந்தைகளைப் பெற்றுக் கொள்வார்கள். அதில் பலர் இறந்து போவார்கள். அப்போது காட்டில் வசித்தார்கள், அதனால் ஆபத்து அதிகம். ஆனால் நாம் அப்போது இருப்பது போலவே இப்போதும் இருக்க முடியுமா என்ன? காலத்துக்கு ஏற்றவாறு நாம் மாற வேண்டும். இப்போது நாம் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் விதமாக செயல்பட வேண்டும் என்றும், அதற்கு சீனாவில் இருப்பது போல கடுமையான சட்டங்கள் தேவை என்றும் பதிவிட்டுள்ளார்.

Published by
லீனா
Tags: Babykangaana

Recent Posts

கடைசி நேரம் வரை திக் திக்…மும்பையை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி நேரம் வரை திக் திக்…மும்பையை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி!

மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…

1 hour ago

என்னதான் ஆச்சு? மீண்டும் சொதப்பிய ரோஹித் சர்மா..டென்ஷனில் ரசிகர்கள்!

மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…

3 hours ago

MIvsRCB : படிதார், கோலி அதிரடி! மும்பைக்கு இது தான் இலக்கு!

மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…

3 hours ago

புகழ்ந்து பேசிய அண்ணாமலை..மேடையில் வைத்தே பதிலடி கொடுத்த சீமான்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…

5 hours ago

MIvRCB : அணிக்கு திரும்பிய நம்பிக்கை நட்சத்திரம் பும்ரா…டாஸ் வென்று மும்பை பந்துவீச்சு தேர்வு!

மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…

6 hours ago

“சீமான் அண்ணன், போர்க்களத்தில் இருக்கும் ஒரு தளபதி!” அண்ணாமலை புகழாரம்!

சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…

6 hours ago