2 கேரட் இருந்தால் போதும், சுவையான ஐஸ்க்ரீம் வீட்டிலேயே தயார்!
இயற்கையாகவே நமக்கு கொடுக்கப்பட்டுள்ள பலன்கள் மற்றும் காய்கறிகளை வைத்து நாம் உடல் நலத்தை நன்றாக பேண முடியும். ஆனால், நாம் செயற்கையான பொருள்களை தான் விரும்பி சாப்பிடுகிறோம். அதற்க்கு காரணம் அதின் சுவை தான். தற்பொழுதும் நாம் வெளியில் கிடைப்பதை விட சுவையான ஐஸ் கிரீம் கேரட்டிலிருந்து எப்படி செய்வது என பார்க்கலாம்.
தேவையானவை
- கேரட்
- பால்
- சர்க்கரை
- ஃபுட் கலர்
- நட்ஸ் கலவை
- வெனிலா எசன்ஸ்
செய்முறை
முதலில் கேரட்டை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அதன் பிறகு, அதை வேக வைத்து ஆறியதும் மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
அரைத்து வைத்துள்ள கேரட்டுடன் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து கிண்டவும். சூடேறியதும் பாலை ஊற்றி இறக்கவும். அதன் பிறகு அதில் வெண்ணிலா எசன்ஸ், ஃபுட் கலர் சேர்த்து ப்ரீசரில் வைக்கவும்.
அரை மணி நேரத்துக்கு பிறகு அதை எடுத்து மீண்டும் மிக்சியில் ஒரு சுற்று சுற்றவிட்டு அரைத்து எடுத்து பொடித்த நட்ஸை தூவி ப்ரீசரில் வைத்து எடுத்தால் அட்டகாசமான கேரட் ஐஸ் க்ரீம் தயார்.