இனி பொது இடத்தில் இறுக்கமாக உடை அணிந்தால் , முத்தம் கொடுத்தால் அபராதம் -சவுதி அதிரடி ..!

Default Image

சவுதி அரேபியாவிற்கு வரும் வெளிநாட்டுப் சுற்றுலாபயணிகளுக்கு சவுதி அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.சவுதி நாட்டின் அதிக சுற்றுலா பயணிகள் வருவதால் நாட்டின் கலாச்சாரம் , கட்டுப்பாடுகளும்  சீர்குலையும் என உணர்ந்து அந்நாடு 19 விதமான கட்டுப்பாடுகளை சவுதி அரசு அறிவித்தது.

அதன்படி வெளிநாட்டு ஆண் , பெண் சுற்றுலாப் பயணிகள் இறுக்கமான உடைகள் ஆபாச வார்த்தைகள் பொறித்த ஆடைகள் அணிவது தடை செய்யபட்டுள்ளது.மேலும் பொது இடங்களில் மது அருந்துவது , முத்தம் கொடுப்பது ஆகியவற்றை குற்றமாக அறிவிக்கப் பட்டுள்ளது.

மேலும் இதற்கு தண்டனையும் ,அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது எந்தவிதமாக தண்டனை எவ்வளவு அபராதம் என்பது குறிப்பிடவில்லை. சவுதி அரசின் கட்டுப்பாட்டால் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்