செவ்வாய்க்கிழமை எந்த பொருளை தானமாக கொடுத்தால் செல்வந்தர்கள் ஆகலாம் என்று இன்று பார்க்கலாம்.
இன்று செவ்வாய்க்கிழமை எந்த பொருளை தானமாக கொடுத்தால் செல்வந்தர்கள் ஆகலாம் என்று தெரிந்து கொள்ளலாம். முதலில் நீங்கள் எந்த பரிகாரம் செய்தாலும் அதனை மனநிறைவாக செய்ய வேண்டும். இதை செய்தால் வெற்றி கிட்டுமா அல்லது கிடைக்காதா என்ற சந்தேகத்தோடு எதனையும் துவங்க கூடாது. முழுமனதோடு பரிகாரத்தை செய்தால் வெற்றி நிச்சயமாக கிடைக்கும். நினைத்த வேண்டுதல் நிறைவேறும்.
பொதுவாகவே செவ்வாய் கிழமை கடவுளுக்கு உகந்த நாள். வாழ்க்கையில் எப்போதும் செல்வந்தர்களாக வாழ செவ்வாய்க்கிழமை செய்ய வேண்டிய தானத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம். செவ்வாய் கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் இந்த வேண்டுதலை செய்ய வேண்டும். காலையில் பூஜை அறையில் 6 மண் அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும். விளக்கு ஏற்றிய பிறகு முருக பெருமானை மனதார வேண்டிக்கொள்ளுங்கள்.
இது போன்று செவ்வாய் கிழமை இந்த வேண்டுதலை செய்து வர வீடு, நகைகள் போன்ற அசையும் அசையா சொத்துக்கள் வாங்க நேரிடும். மேலும், இந்த வழிபாட்டுடன் அன்றைய தினத்தில் துவரம் பருப்பினை தானம் வழங்கினால் நீங்கள் செல்வந்தர்கள் ஆகும் வாய்ப்பு கிட்டும். நீங்கள் செய்யும் தானம் 9 என்ற எண் கணக்கில் இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதாவது 1 கிலோ துவரம்பருப்பு வாங்கினால் அதிலிருந்து 100 கிராம் அளவு பருப்பினை எடுத்து வைத்துவிட்டு மீதம் இருக்கும் 900 கிராம் துவரம்பருப்பினை தானமாக அளியுங்கள். இந்த தானத்தை ஏழை எளியவர்கள், இல்லாதவர்களுக்கு அளிக்கலாம். இதே போன்று நீங்கள் செய்து வந்தால் செல்வ செழிப்போடு வாழ்வீர்கள். 16 செல்வங்களும் நிறைவாக கிடைக்கப்பெறும்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…