காலை நேரத்தில் எழுந்ததும் முகம் மிருதுவாக இருக்கும். இந்த நேரத்தில் நாம் சில இயற்கையான அழகு குறிப்பு முறைகளை உபயோகிக்கும் பொழுது நமது முகத்தில் விரைவில் நாம் விரும்பக்கூடிய பளபளப்பு உருவாகுவதுடன், முகத்தில் உள்ள மாசுக்கள் நீங்குவதற்கும் இது காரணமாக அமையும். அதே நேரத்தில் காலையில் என்னென்ன அழகு குறிப்புகளை மேற்கொண்டால் இயற்கையான முக அழகு பெற முடியும் என்பது குறித்து இன்று நாம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
காலையில் எழுந்ததும் பலருக்கு கண்களுக்குக் கீழே வீக்கம் ஏற்படும். இதற்கு காரணம் என்னவென்றால் தேவையற்ற நீர் தேங்குவது தான். இந்த வீக்கம் முகத்தின் அழகை கெடுத்து விடும். எனவே காலையில் எழுந்ததும் முகத்தில் ஐஸ் கட்டி வைத்து ஒத்தடம் கொடுக்க வேண்டும், அல்லது கண்களை சுற்றியுள்ள இடத்தில் ஐஸ் கட்டியை தடவினால் போதும். தொடர்ந்து 15 நாட்கள் இவ்வாறு செய்து வரும் பொழுது இந்த வீக்கம் நிரந்தரமாக மாறிவிடும்.
மேலும், முகத்தில் ஆங்காங்கு இருக்கக்கூடிய கருமை தன்மைகள் முக அழகை கெடுத்து விடும். பலருக்கு உதட்டுக்குக் கீழ், மேல் உதட்டின் இரு புறமும், மூக்குக்கு இருபுறமும், நெற்றியில் என சில பகுதிகளில் கருமை நிறத் திட்டுகள் காணப்படும். இந்த கருமை நிறத் திட்டுக்களை போக்குவதற்கு காலை எழுந்ததும் பாசிப்பயறுடன் தயிர் கலந்து முகத்தில் தடவி, அரை மணி நேரம் கழித்து சுத்தமான நீரில் கழுவி விட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வரும் பொழுது முகத்தில் உள்ள கருமை திட்டுக்கள் அனைத்தும் மறைந்துவிடும்.
அதேபோல காலையில் குளிப்பதற்கு முன்பதாக கற்றாழை சாறு கொண்டு முகத்தில் நன்றாக மசாஜ் செய்து வரும் பொழுது முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்குவதுடன், முகம் மிருதுவாகவும் மாறும். அடுத்ததாக முகத்தின் மிக முக்கியமான பாகம் உதடு தான். உதட்டில் காணப்படக்கூடிய வறண்ட தன்மை, கருமை நிறங்களை மாற்றுவதற்கு காலை எழுந்ததும் பீட்ரூட் அல்லது புதினா இலை சாறுகளை உதட்டில் தடவலாம்.
சர்க்கரையும் தேனும் கலந்து உதட்டில் ஸ்க்ரப் செய்து விட்டு, இந்த புதினா இலை சாற்றை உதட்டில் வைத்து விட வேண்டும். இவ்வாறு இரண்டு வாரம் செய்து வந்தால் நிச்சயம் உங்கள் உதடு சிகப்பழகு அடைவதை காண முடியும். மேலும், பல வழிமுறைகள் உள்ளது. இன்று நாம் தெரிந்து கொண்ட இந்த வழிமுறைகளை உபயோகப்படுத்தி பார்ப்போம். நாம் விரும்பக்கூடிய இயற்கையான முக அழகை பெறுவோம்.
சென்னை -90 கிட்ஸ்க்கு பிடித்த பெட்டிக்கடை தேன் மிட்டாய் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த செய்தி…
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று (நவம்பர்5)…
திருச்சி : வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுகளை முன்னிட்டு சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு…