இவ்வாறு செய்தால் சர்க்கரை நோயை கட்டுபாட்டுக்குள் வைக்கலாம் !

Default Image

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளவர்கள் எல்லா விஷயங்களிலும் மிகவும் அதிக அளவு கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள். மருத்துவர்கள் அப்படித்தான் அவர்களை அவ்வாறு நடந்துகொள்ளுமாறு கூறுவர். மாத்திரை சாப்பிடுவது மட்டும் சர்க்கரை நோயை கட்டுப்டுத்தாது. உங்களின் ரத்தத்தில் சர்க்கரை அளவு எவ்வளவு உள்ளது என்பதை  அறிந்து கொண்டு  அதற்கேற்ப உணவுமுறையையும் மருந்துகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

1.  பொதுவாக சர்க்கரை வியாதி உள்ளவர்கள் எல்லா விஷயங்களுக்கும் அச்சபட்டு கொண்டே இருப்பார்கள். முதலில் இயல்பான  நிலைக்கு வர வேண்டும். முழு ஆரோக்கியமுடையவர்கள் இல்லை என்பதை முதலில் உணர வேண்டும். சரியான உணவு பழக்க வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

2. சர்க்கரைநோய் மன அழுத்தத்தை தரக்கூடியது என்கிறார்.எப்போதும் நீரிழிவு பற்றி நினைத்துகொண்டு இருப்பதால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ,துன்பமான நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். தங்கள் இலக்குகளையோ அல்லது தினசரி கடமைகளில் இருந்து தவறும் போது அவர்கள் அவர்களையே மன்னித்து கொள்ள வேண்டும் நிலை உண்டாகிறது.

3. சிறிது சிறிதாக நாங்கள் முடிந்தவரை எல்லாவற்றையும் சிறப்பாக செய்து முடிப்போம் என்ற நம்பிக்கையை முதலில் அவரவர்  மனதில் ஏற்படுத்தி கொள்ளவேண்டும். எல்லோராலும் அனைத்துசெயல்களையும்  சிறப்பாக செய்ய முடியாது என்பதை முதலில் உணரவேண்டும். ஒருவர் நீரிழிவு நோய் வந்தவுடன்  எல்லைமீறிய கோபம், கவலை, துக்கம் வருவதற்கு வாய்ப்புள்ளது . அதை கட்டுப்படுத்திக் கொள்ளும் மனபக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

4. ஒரே மாதிரியான உணவு முறைகளையும் மருந்து முறைகளையும்சர்க்கரை நோயாளிகள் கடைபிடிப்பதே முதலில் தவறு. இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவின்  தன்மைக்கு ஏற்ப தங்களது வாழ்க்கைமுறையில் மாற்றம் செய்யவேண்டி இருக்கிறது.

5.நிரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருசிலர்  தங்களைப் பற்றி சுற்றியுள்ளவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி சிந்தனை செய்கின்றனர். நல்ல ஆரோக்கியமான சூழல் பற்றி கவலைகொள்கின்றனர். குடும்பம் அல்லது நண்பர்களிடமிருந்து சரியான ஆதரவு கிடைக்காத போது அவர்கள் மேலும் துன்பத்திற்கு உள்ளாகிறார்கள். இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து விடும் என்கிற பயம். இரத்தத்தில் சர்க்கரை அளவை நிர்வகிப்பதிலும் மன அழுத்தம் ஏற்படும். எப்போது என்ன எப்படி சாப்பிட வேண்டும் என்ற குழப்பம் உருவாகும்.

6. நிரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் மற்றொரு வகையினர் தோல்வி மற்றும் எதிர்மறை எண்ணங்களை கொண்டவர்களாக உள்ளனர். நீரிழிவு நோயாளிகள் மற்ற விஷயங்களை விட தங்களுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவேண்டும். அப்படி கவனம் செலுத்தும் போது மட்டும் தான் உங்கள் நோயை கட்டுபாட்டுக்குள் வைக்க முடியும்.

7.சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஏற்கனவே உள்ள உங்கள் வாழ்கை முறையிலேயே ,உங்கள் சிகிச்சையிலும் திட்டம் வகுக்கவேண்டும். அதாவது சில கட்டுப்பாடுகளை தங்களுக்குள்ளே வகுக்க வேண்டும். உதாரணமாக மூன்று வேலை காபி குடிப்பவர் முதலில் ஒருவேளை மட்டும் சர்க்கரை இல்லாமல் குடித்து பழக வேண்டும். பிறகு படிப்படியாக சர்க்கரை சேர்க்காமல் காபி அருந்தும் வழக்கம்  வந்து விடும்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்