உலக நாயகன் சம்மதித்தால் நான் தேவர் மகன் 2 படத்தை இயக்குவேன் !பிக் பாஸ் பிரபலத்தின் ஓபன் டாக் !
இயக்குநர் சேரன் கோலிவுட் சினிமாவில் முன்னணி இயக்குனராகவும் , மிக சிறந்த நடிகராகவும் வலம் வருகிறார். இந்நிலையில் சேரன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிலையில் அவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியேறிவிட்டார்.
சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் சேரனுக்கு ஒரு பாராட்டு விழா நடந்த பட்டது.அந்த நிகழ்வில் அவருக்கு கேக் வெட்டி கொண்டாடினார்கள். அப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டதற்கு காரணம் விஜய் சேதுபதி தான் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் அவர் நூறு நாட்கள் பணம் இல்லாமல் ,தொலைக்காட்சி மற்றும் செல்போன் இல்லாமல் அங்கு கிடைக்க கூடிய பொருட்களை வைத்து வாழ்ந்தது. முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையை போல் இருந்தது. அந்த வாழ்க்கையை நான் மதிக்கிறேன் என்றும் அவர் கூறினார். விரைவில் விஜய் சேதுபதியை வைத்து படம் இயக்க போவதாகவும் ,பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் வருவதற்கு காரணமும் விஜய் சேதுபதி தான் என்றும் கூறியுள்ளார்.அதற்கு பிறகு அவர் கமல் சம்மதித்தால் அவரை வைத்து “தேவர்மகன் 2” படத்தை இயக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.