மார்கழி மாதம் 30 நாளும் பெண்கள் இதை செய்தால் போதும்..!நினைத்த காரியம் நிறைவேறும்..!

Published by
Sharmi

மார்கழி மாதம் 30 நாளும் பெண்கள் இதை செய்தால் போதும், நினைத்த காரியம் நிறைவேறும்.

பெண்கள் மனதில் நினைத்த வேண்டுதல் நிறைவேற இந்த மார்கழி மாதத்தில் எப்படி வேண்டுதல் செய்ய வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்ள போகிறோம். பொதுவாகவே வீட்டில் உள்ள பெண்களுக்கு நிறைய வேண்டுதல் இருக்கும். தன் மகளுக்கு திருமணம் நடக்க வேண்டும், தன் பிள்ளைக்கு வேலை கிடைக்க வேண்டும், கணவர் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும், செல்வ செழிப்போடு இருக்க வேண்டும், தங்க நகைகள் வாங்க வேண்டும் என்று பல்வேறு விதமான வேண்டுதல்களை பெண்கள் கொண்டிருப்பார்கள்.

இது போன்று இருக்கும் வேண்டுதல்களில் ஏதேனும் ஒன்றை மனதில் நினைத்து கொண்டு அது நிறைவேற வேண்டும் என்றால் அதற்கு மார்கழி மாதம் முழுவதும் செய்ய வேண்டிய வேண்டுதலை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். பெண்கள் மார்கழி மாதம் காலையிலேயே விழித்து சுத்தபத்தமாக குளித்து, வாசல் தெளித்து கோலம் போடவேண்டும். அதேபோல் அசைவம் சாப்பிடாமல் இருக்கும் நாட்களில் தலைக்கு குளிக்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் போட்ட கோலத்தின் மேல் பசுஞ்சாணம் அல்லது பூசணிப்பூ அல்லது மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து அதன் மேல் செம்பருத்தி பூ அல்லது சாமந்தி பூ வைக்கலாம்.

பின்னர் பூஜை அறைக்கு வந்து கடவுள்களுக்கு மலர்களை வைத்து அலங்காரம் செய்து விட்டு மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைத்து அதற்கு குங்கும பொட்டு வைத்து அதன் மேல் அருகம்புல் இரண்டு வைக்க வேண்டும். பின்னர் உங்களுடைய ஏதாவதொரு வேண்டுதலை மனதில் நினைத்து பிள்ளையார், குலதெய்வம், அம்மனிடம் மனதார வேண்டிக்கொள்ளுங்கள். இதே போன்று தினமும் ஒரு பிள்ளையார் பிடித்து வேண்டுதல் செய்ய வேண்டும்.

பழைய பிள்ளையாரை தண்ணீரில் கரைத்து விடலாம். மாதவிடாய் காலத்தில் பூஜை செய்வதை நிறுத்தி விட்டு அடுத்த நாட்களில் இதனை தொடரலாம். இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் இவை அனைத்தையும் காலை 6 மணிக்கு முன்பாக செய்து முடிக்க வேண்டும். மார்கழி மாதத்தில் நீங்கள் செய்யும் இந்த வேண்டுதலுக்கு இந்த மாதத்திலேயே அல்லது தை மாத துவக்கத்தில் நீங்கள் நினைத்த காரியம் நிச்சயம் நிறைவேறும்.

Recent Posts

பொங்கல் ரேஸில் இருந்து பின் வாங்கிய விடாமுயற்சி! ரெட் ஜெயண்ட் போட்ட சூப்பர் பிளான்?

பொங்கல் ரேஸில் இருந்து பின் வாங்கிய விடாமுயற்சி! ரெட் ஜெயண்ட் போட்ட சூப்பர் பிளான்?

சென்னை :  அடுத்த ஆண்டு 2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும்…

23 minutes ago

வெளியானது ‘7/G ரெயின்போ காலனி 2’ அப்டேட்.! புத்தாண்டில் சர்ப்ரைஸ் கொடுத்த செல்வராகவன்.!

சென்னை: இயக்குநர் செல்வராகவன் தனது மெகா ஹிட் படமான "7ஜி ரெயின்போ காலனி" படத்தின் அடுத்த பாகத்தின் போஸ்டரை புத்தாண்டை…

28 minutes ago

‘கேம் சேஞ்சர்’ படத்தின் டிரெய்லர் எப்போது? அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நாயகன் ராம்சரண், கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்தின் ட்ரெய்லர், நாளை…

1 hour ago

திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை :  பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல…

2 hours ago

தமிழகத்தில் வியாழக்கிழமை (02/01/2025) இங்கெல்லாம் மின்தடை!

உடுமல்பேட்டை :   பழனி ரோடு, தங்கமாலூடை, ராகல்பாவி, சுண்டகன்பாளையம், ஆர் வாலூர், கணபதிபாளையம், வானுசுபட்டி, ஏரிபாளையம், புக்களம், குறிஞ்சரி, சீனவரன்பட்டி,…

2 hours ago

“பொங்கல் பரிசாக ரூ.30 ஆயிரம் கொடுக்க வேண்டும்.” செல்லூர் ராஜு அதிரடி கோரிக்கை!

மதுரை : தமிழக அரசு, இந்த முறை பொங்கல் சிறப்பு பரிசாக ஒரு முழு கரும்பு, ஒரு கிலோ பச்சரிசி,…

3 hours ago