பொதுவாகவே வீட்டில் தினமும் விளக்கேற்றி கடவுளை வணங்குவது என்பது வழக்கமான முறை தான். பூஜை அறையில் காமாட்சி விளக்கு அல்லது குத்து விளக்கு ஏற்றி வழிபடுவார்கள். இது குடும்பத்தில் சகல சௌபாக்கியங்களையும் கடவுள் அருளையும் பெற உதவும். ஆனால், ஒருசிலர் கோவிலில் ஏற்றும் தீபத்தை போன்று வீட்டில் ஏற்றுகிறார்கள். அது முறையானதல்ல. அதனால் வீட்டில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். குறிப்பாக உறவுகளுக்கிடையே சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது. கோவிலில் சில பரிகாரத்திற்காக, எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி அதனை விளக்கு போல் செய்து தீபம் ஏற்றுவார்கள். ஒரு சில பரிகாரங்களில் தேங்காயை இரண்டாக வெட்டி அதில் தீபம் ஏற்ற கூறுவார்கள்.
இதெல்லாம் கோவிலில் ஏற்றுவது என்பது எவ்வித பாதிப்பும் உங்களுக்கு ஏற்படாது. அதேபோல் நீங்கள் செய்த பரிகாரமும் நிச்சயம் பயனளிக்கும். ஆனால், இதுபோன்று எலுமிச்சை, தேங்காய், வெண்பூசணி போன்று இரண்டாக வெட்டி தீபம் ஏற்றும் எதனையும் வீட்டில் ஏற்ற கூடாது. ஏனென்றால், இரண்டாக வெட்டி தானே நீங்கள் தீபம் வீட்டில் ஏற்றுகிறீர்கள். அதனால் கணவன் மனைவிக்குள் பிரச்சனைகள் அதிகரிக்கும். சண்டை, சச்சரவுகள் என நிம்மதி ஏற்படாது. கணவன் மனைவி ஒற்றுமை என்பது அங்கு இருக்காது. அதனால் இது போன்ற விளக்குகள் கோவிலில் ஏற்றுங்கள். வீட்டில் ஏற்ற கூடாது.
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…