இதை செய்யவில்லை என்றால் 70 லட்சம் பேர் அகதிகள் ஆவர் – உக்ரைன் தூதர்
உக்ரைன் மீதான போரை உடனே நிறுத்துமாறு உலக நாடுகள் ரஷ்யாவிடம் வலியுறுத்த வேண்டும் என்று இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் வேண்டுகோள்.
உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா நிறுத்தாவிடில் உக்ரைனில் இருந்து 70 லட்சம் பேர் புகலிடம் தேட நேரிடும் என்று இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் இகோர் போலிகா தெரிவித்துள்ளார். 70 லட்சம் பேர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் தேட நேரிடும் என்றும் கூறியுள்ளார். உக்ரைன் மீதான போரை உடனே நிறுத்துமாறு உலக நாடுகள் ரஷ்யாவிடம் வலியுறுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ரஷ்ய படைகளின் ஆக்ரோஷ தாக்குதல்களால், உக்ரைன் நாட்டு மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் சொந்த வாகனங்கள் அல்லது நடை பயணமாக ருமேனியா, ஹங்கேரி, போலந்து உள்ளிட்ட அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். இதனால் உக்ரைன் எல்லைப் பகுதிகளில் பொதுமக்கள் கடும் குளிரிலும் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், தாக்குதலை ரஷ்யா நிறுத்தாவிடில் உக்ரைனில் இருந்து 70 லட்சம் பேர் 70 லட்சம் பேர் அகதிகள் ஆவர் என்று தூதர் தெரிவித்துள்ளார்.