இந்த பதிவுகளுக்கு என்னை டேக் செய்தால் அவர்கள் பிளாக் செயப்படுவார்கள் – நடிகர் விவேக்
நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும், சமூக அக்கறை கொண்டவரும் ஆவார். இவர் சினிமாவில் மட்டும் அக்கறை செலுத்தாமல், சமூகத்தின் மீதும் அக்கறை கொண்டவராக வலம் வருகிறார்.
இந்நிலையில், நடிகர் விவேக் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘நண்பர்கள் அஜித், விஜய் அல்லது எந்த நடிகரையும், தனி நபரையும் தரம் தாழ்ந்து செய்யும் எதிர்மறை பதிவுகளை நான் விரும்புவதில்லை என கூறியுள்ளார். அப்படிப்பட்ட பதிவுகளில் என்னை டேக் செய்தால் அவர்கள் பிளாக் செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.