காதினுள் பூச்சி சென்றுவிட்டால் மறக்காம இதை மட்டும் செய்திருங்க…!
பூச்சிகள் காதினில் நுழைந்தால் முதலில் அப்பூச்சியை சாகடிப்பதற்கு ஆன முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
நாம் படுக்கைக்கு செல்லும்போது அல்லது விழித்திருக்கும் போது நம்மை அறியாமலே நமக்கு தெரியாமல், காதுகளுக்குள் சில நேரங்களில் பூச்சிகள் சென்று விடுவது உண்டு. அவ்வாறு பூச்சிகள் காதினில் நுழைந்தால் முதலில் அப்பூச்சியை சாகடிப்பதற்கு ஆன முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
காதினுள் சென்ற பூச்சியின் மூச்சு தடைப் பட்டு இறந்து விடும் அல்லது காதில் இருந்து வெளியே வந்து விடும். ஆனால், காதினுள் வெறும் தண்ணீரை மட்டும் ஊற்றுவது நல்லதல்ல. ஏனேன்றால் தண்ணீரில் பூச்சிகளுக்கு உயிர் வாழ்வதற்குத் தேவையான பிராண வாயு உள்ளது. எனவே இந்த பூச்சி மேலும் அதிக வீரியத்துடன் கடிக்க ஆரம்பிக்கும் எனவே வெறும் தண்ணீரை ஊற்றக்கூடாது.
பூச்சி நமது கைகளில் தட்டுப்பட்டாலோ, வெளியில் தெரிந்தாலோ அதனை இழுக்க முயற்சிகளை செய்ய கூடாது. ஏனென்றால் அவ்வாறு இழுக்கும் போது அதிகமாக வீரியத்துடன் கடிக்குமே தவிர அது வெளியே வருவதற்கு முயற்சி செய்யாது. அவ்வாறு நாம் அதையும் மீறி அதனை இழுத்தால் பூச்சியின் உடம்புதான் தலையிலிருந்து துண்டிக்கப்பட்டு வெளியே வரும்.
அப்படியே இந்த பூச்சி வெளியே வந்தாலும் காதில் உள்ள செவிப்பறையில் கிழிந்து விடுவதற்கும் வாய்ப்புள்ளது. எனவே பூச்சியை முதலில் சாகடித்துவிட வேண்டும். சிறு குழந்தைகளுக்கு மட்டும் இந்த பிரச்சினை இல்லாமல், பெரியவர்களுக்கும் இந்தப் பிரச்சினை ஏற்படுவதுண்டு. எனவே பூச்சியை காதில் இருந்து வெளியே எடுக்கும் எடுப்பதற்கு ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும். அவ்வாறு நாம் செயல்படவில்லை என்றால், இது அறுவை சிகிச்சை வரை கூட கொண்டு போய் விடுவதற்கான வாய்ப்புள்ளது. எனவே கவனமுடன் செயல்படுங்கள்.