ஊரடங்கை பின்பற்றாவிட்டால் ஜூன் 30 -க்கு பின்னர் ஊரடங்கு நீட்டிக்கப்படும் – உத்தவ் தாக்கரே
மஹாராஷ்டிராவில் ஊரடங்கை மக்கள் பின்பற்றாவிட்டால் ஜூன் 30 -க்கு பின்னர் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று முதலமைச்சர் எச்சரித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.87 லட்சத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது .இதில் மஹாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது மஹாராஷ்டிராவில் இன்று மட்டும் 3,607 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, இன்று மட்டும் 152 பேர் இறந்துள்ளனர்.இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 97,648 ஆக அதிகரித்துள்ளது ,மேலும் இறப்பு எண்ணிக்கை 3,590 ஆக உயர்ந்துள்ளது .
இந்நிலையில் நேற்று மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அம்மாநில மக்களுக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது ஜூன் 30 தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் மத்திய அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது.இதை மக்கள் பின்பற்றாவிட்டால் ஜூன் 30 க்கு பின்னர் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று முதலமைச்சர் உத்தவ் தாக்கரே எச்சரித்துள்ளார்.
ஆனால் மக்கள் தங்கள் நலனைக் கவனித்துக்கொள்வதால் அரசாங்கத்தின் விதிகளையும் வழிகாட்டுதல்களையும் மக்கள் கேட்பார்கள் என்று நான் நம்புகிறேன்” என்று முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று (புதன்கிழமை) தெரிவித்தார்.
மஹாராஷ்டிராவில் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும்,கட்டுப்படுத்தாத மண்டல பகுதிகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்ட்டுள்ளது.இதில் டாக்ஸிகள், ஆட்டோ, நிபந்தனைகளுடன் கூடிய தனிப்பட்ட வாகனங்கள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது .அரசு அலுவலங்களில் 15% ஊழியர்கள் மற்றும் தனியார் அலுவலங்களில் 10% ஊழியர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் அலுவலகங்களுக்கு வருவோர்க்கு வெப்ப பரிசோதனை மற்றும் சமுக இடைவெளியுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது .