இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்ஷே வீட்டிற்கு செல்லுங்கள் என்று இன்று நீங்கள் கூறுகிறீர்கள்; அவர் பதவியில் இருந்து விலகினால் என்ன திட்டம் உங்களிடம் உள்ளது? யார் உங்களை வழிநடத்துவது? என நமல் ராஜபக்ஷே கேள்வி.
இலங்கை பொருளாதார நெருக்கடி
இலங்கையை பொறுத்தவரையில் கொரோனா பெருந்தொற்றுக்கு பின் பெரிய அளவிலான பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நிய செலவாணி வரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்துப் பொருட்களும் வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. இதனால், அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
எதிர்க்கட்சியினருக்கு அழைப்பு
அங்கு தினமும் 10 மணி நேரத்துக்கும் மேலாக மின்வெட்டு ஏற்படுவதுடன், அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்த சூழலில் இலங்கை அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர் அனைத்து கட்சிகளும் இணைந்து தேசிய அரசை அமைக்க முன் வருமாறு எதிர்க்கட்சியினருக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே அழைப்பு விடுத்துள்ளார்.
ஆதரவை திரும்ப பெறும் எதிர்க்கட்சிகள்
ஆளும் கட்சிக்கு வழங்கிய ஆதரவை கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றாக வாபஸ் பெறுகின்றன. இதனால் இலங்கையில் ஆளும் கட்சி பெரும்பான்மையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. முன்னதாக இலங்கை சுதந்திர கட்சி மற்றும் தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய இரண்டு முக்கிய கட்சி ஆளும் கட்சிக்கு அளித்த ஆதரவை திரும்ப பெற்றது.
யார் வழிநடத்துவது ?
கோட்டபய ராஜபக்சேவை பதவி விலகி வீட்டிற்கு செல்லுமாறு வலியுறுத்தி பலரும் போராட்டத்தில் ஈடுபட்டும் வரும் நிலையில், இதுகுறித்து நமல் ராஜபக்ஷே கூறுகையில், ஜனநாயக கொள்கைகளை மீறி அரசை மாற்றுவதைவிட மக்களை அமைதிப்படுத்துவதே முதல்பணி. இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்ஷே வீட்டிற்கு செல்லுங்கள் என்று இன்று நீங்கள் கூறுகிறீர்கள்; அவர் பதவியில் இருந்து விலகினால் என்ன திட்டம் உங்களிடம் உள்ளது? யார் உங்களை வழிநடத்துவது? என கேள்வி எழுப்பியுள்ளார்.
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும், சாய்ரா பானுவும் 29 வருட 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக நவம்பர்…
மும்பை : அதானி குழுமம் மீது முன்னர் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றசாட்டை முன்வைத்தது அப்போது அந்த அறிக்கை…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும் மனைவி சாய்ரா பானுவும் திருமணமாகி 29 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாகவும், இருவரும்…