இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்ஷே பதவியில் இருந்து விலகினால் யார் உங்களை வழிநடத்துவது? – நமல் ராஜபக்ஷே

Default Image

இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்ஷே வீட்டிற்கு செல்லுங்கள் என்று இன்று நீங்கள் கூறுகிறீர்கள்; அவர் பதவியில் இருந்து விலகினால் என்ன திட்டம் உங்களிடம் உள்ளது? யார் உங்களை வழிநடத்துவது? என நமல் ராஜபக்ஷே கேள்வி.

இலங்கை பொருளாதார நெருக்கடி 

இலங்கையை பொறுத்தவரையில் கொரோனா பெருந்தொற்றுக்கு பின் பெரிய அளவிலான பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நிய செலவாணி வரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்துப் பொருட்களும் வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. இதனால், அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

எதிர்க்கட்சியினருக்கு அழைப்பு 

அங்கு தினமும் 10 மணி நேரத்துக்கும் மேலாக மின்வெட்டு ஏற்படுவதுடன், அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்த சூழலில் இலங்கை அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர் அனைத்து கட்சிகளும் இணைந்து தேசிய அரசை அமைக்க முன் வருமாறு எதிர்க்கட்சியினருக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே அழைப்பு விடுத்துள்ளார்.

ஆதரவை திரும்ப பெறும் எதிர்க்கட்சிகள்

ஆளும் கட்சிக்கு வழங்கிய ஆதரவை கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றாக வாபஸ் பெறுகின்றன. இதனால் இலங்கையில் ஆளும் கட்சி பெரும்பான்மையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. முன்னதாக இலங்கை சுதந்திர கட்சி மற்றும் தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய இரண்டு முக்கிய கட்சி ஆளும் கட்சிக்கு அளித்த ஆதரவை திரும்ப பெற்றது.

யார்  வழிநடத்துவது ?

கோட்டபய ராஜபக்சேவை பதவி விலகி வீட்டிற்கு செல்லுமாறு வலியுறுத்தி பலரும் போராட்டத்தில் ஈடுபட்டும் வரும் நிலையில், இதுகுறித்து நமல் ராஜபக்ஷே கூறுகையில், ஜனநாயக கொள்கைகளை மீறி அரசை மாற்றுவதைவிட மக்களை அமைதிப்படுத்துவதே முதல்பணி. இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்ஷே வீட்டிற்கு செல்லுங்கள் என்று இன்று நீங்கள் கூறுகிறீர்கள்; அவர் பதவியில் இருந்து விலகினால் என்ன திட்டம் உங்களிடம் உள்ளது? யார் உங்களை வழிநடத்துவது? என கேள்வி  எழுப்பியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்