கர்ப்பிணி பெண்கள் இதை செய்தால் போதும் – வலி இல்லா வாழ்வு வாழலாம்!

Default Image

கர்ப்பிணிகள் தங்களது உடல் எடைகள் மற்றும் உடல் அழகில் காணக்கூடிய மாற்றங்கள் மட்டுமே வெளிப்படையானது.  ஆனால், உடலில் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள முடியாது. அதில் சில வலிகள் தடுக்கும் முறை மற்றும் ஆரோக்கியமான வழி குறித்து அறிவோம்.

கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாந்தியை நிறுத்த

கர்ப்பிணி பெண்களுக்கு முதல் மாதம் முடிவடைந்ததுமே அடுத்த ஐந்து மாதங்கள் வரை தொடர் வாந்தி மற்றும் தலை சுற்றல் ஆகியவை காணப்படும். இந்த வாந்தியை நிறுத்த, லவங்க பொடியை நீரில் கரைத்து அரை மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி பருகி வந்தால் சரியாகும்.

கர்ப்பப்பை வலிமை பெற 

கர்ப்பப் பை வீக்காக இருந்தால் குழந்தையை சுகமாக பெற்றெடுக்க முடியாது. எனவே கர்ப்பகாலத்தில் வலி நீங்கி கர்ப்பப்பை பலப்பட வேண்டும். வெட்சி எனும் பூவை அரைத்து அருகம்புல் சாறு கலந்து குடித்து வந்தால் கருப்பப் பை பலப்பட்டு வலி நீங்கும்.

கர்ப்பகால கை கால் வீக்கத்தை குறைக்க

பொதுவாகவே கர்ப்பிணிகளுக்கு குறிப்பிட்ட மாதம் தாண்டியதும் கை மற்றும் கால், முகம் ஆகியவை வீங்குவது வழக்கம் இதை தடுக்க வேண்டுமானால், நெல்லிக்காய் முருங்கைக்காய் முள்ளங்கி இவை மூன்றையும் உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். இது உடலுக்கு தேவையான சத்துக்களை கொடுத்து வீக்கத்தை குறைக்கும்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்