அரிசி மட்டும் இருந்தால் போதும் – சுவையான அரிசி உப்புமா தயார்!
அரிசியை வைத்து நம்மால் சோறு, கஞ்சி, மற்றும் கூழ் ஆகிய இவைகள் மட்டும் தான் செய்ய முடியும். ஆனால், அதே அரிசியில் சுவையான உப்புமா செய்வது எப்படி என்று தெரியுமா? வாருங்கள் பார்ப்போம்.
தேவையானப் பொருட்கள்
- அரிசி
- கடலைப்பருப்பு
- காய்ந்த மிளகாய்
- பச்சை மிளகாய்
- தேங்காய்
- இஞ்சி
- உளுத்தம்பருப்பு
- பெருங்காயம்
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் அரிசியைப் போட்டு தொட்டால் சுடும் அளவுக்கு வறுத்து கொள்ளவும். அதன் பின்பு அதை மிக்ஸியில் போட்டு ரவைப் பதத்தில் அரைத்து எடுக்கவும். அதன்பின் ஒரு சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு பெருங்காயம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்கவும்.
நன்றாக வதங்கிய பின்பு தேங்காயை போடவும். அதன் பின்பு இரண்டு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொஞ்ச நேரம் கொதிக்கவிடவும். கொதித்தவுடன் அதில் உப்பு, கருவேப்பிலை போட்டு அதனுடன் அரைத்து வைத்துள்ள அரிசியை சேர்க்கவும். 10 நிமிடத்திற்கு மூடி வைக்கவும். அவ்வப்போது கிளறி விடவும். பத்து நிமிடத்தில் எடுத்துப் பார்த்தால் சுவையான உப்புமா தயார்.