“வாழ்ந்தால் ராஜாவா தான் வாழுவேன்”.! தேங்கியுள்ள மழைநீரில் ஜாலியாக பாடியபடி போட் ஓட்டிய மன்சூர் அலிகான்.!
தேங்கியுள்ள மழைநீரில் ஜாலியாக பாடியபடி போட் ஓட்டிய மன்சூர் அலிகானின் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
நிவர் புயல் காரணமாக பல இடங்களில் பெய்த பலத்த மழையால் சாலைகள் யாவும் வெள்ளங்கள் சூழ்ந்துள்ள காணப்படுகிறது.இதனால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர் . மேலும் சென்னையில் குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
இந்த நிலையில் தேங்கியுள்ள மழைநீரில் போட் ஓட்டிய படி பாட்டு பாடி கொண்டிருக்கும் மன்சூர் அலிகானின் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.ஜாலியாக தனுஷின் ஜகமே தந்திரம் படத்திலிருந்து “என்ன வேணா நடக்கட்டும் நான் சந்தோஷமா இருப்பேன் ரகிட ரகிட” என்ற பாடலையும் , பம்பாய் படத்திலுள்ள உயிரே பாடலை “புயலே புயலே எங்கள் தமிழ்நாட்டை விட்டு ஓடி விடு” என்ற பாணியிலும் பாடி தேங்கி நிற்கும் தண்ணீரில் போட் ஓட்டுகிறார்.தற்போது அந்த வீடியோ பலரால் ஷேர் செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
Mansoor ali khan ???????? pic.twitter.com/PRnxgBQqW6
— ♦️ ???????????????? ⓞⓕ ???????????????????????????????? ♦️ (@forsakenfellow) November 26, 2020