அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றால் ,சீனாவிற்கு கிடைத்த வெற்றியாகும் – டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றால் ,சீனாவிற்கு கிடைத்த வெற்றியாகும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கொரோனாவைப் பற்றி பேசுவதை விட, நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலை பற்றி பேசும் பேச்சுக்களே அதிகளவில் உள்ளது. இதன்காரணமாக, அங்கு தேர்தல் பணிகள், விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது. ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி ஆகும். குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். மேலும், ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபரான ஜோ பைடன் போட்டியிடுகிறார்.துணை அதிபராக அமெரிக்க வாழ் இந்திய பெண்மணியான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.
அமெரிக்காவில் தேர்தல் தொடங்க இன்னும்நாட்கள் குறைவாக உள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளது. இதனிடையே பேரணி ஒன்றில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசினார்.அவர் பேசுகையில், ஜோ பிடன் ஒரு அரசியல்வாதியாக தனது 50 ஆண்டுகளில் அமெரிக்க பொருளாதாரத்தை பெரிதும் பாதிக்கும் வகையில் செயல்பட்டுள்ளார். நவம்பர் 3 ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் பைடன் வெற்றி பெற்றால் அது சீனாவுக்கு கிடைத்த வெற்றியாகும்.ஜோ பிடன் கடந்த 47 ஆண்டுகளாக உங்கள் வேலைகளை சீனா மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பினார் என்று தெரிவித்துள்ளார்.