இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அசத்தலான தக்காளி சட்னி..!
பெரும்பாலும் காலை உணவுக்கு இட்லி, தோசை தான் பலர் வீட்டில் செய்வார்கள். இந்த இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்வதற்குக் தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னி செய்து சாப்பிடுவார்கள். குறிப்பாக இதில் பலருக்கு மிகவும் பிடித்தது தக்காளி சட்னி தான். இந்த சட்னியை எப்படி அட்டகாசமான சுவையில் செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
தேவையான பொருட்கள்
- காய்ந்த மிளகாய்
- வெங்காயம்
- பெருங்காயம்
- எண்ணெய்
- உப்பு
- கொத்தமல்லி
- பூண்டு
- கடுகு
- உளுத்தம்பருப்பு
- சீரகம்
- கறிவேப்பிலை
செய்முறை
முதலில் காய்ந்த மிளகாயை காம்பு நீக்கி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதன் பின்பதாக ஒரு மிக்ஸி ஜாரில் வெங்காயம், தக்காளி காய்ந்த மிளகாய், பூண்டு, கொத்தமல்லி, உப்பு ஆகியவை சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அடுப்பில் சட்டியை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு சீரகம் போட்டு தாளிக்கவும்.
பின்பு, மிளகாய், பெருங்காயம், கருவேப்பிலை சேர்த்து தாளித்து ஒரு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துக் கொள்ளவும். அதன் பின்பு அரைத்து வைத்துள்ள சட்னியை ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும். அவ்வளவுதான் அட்டகாசமான தக்காளி சட்னி தயார். ஒரு முறை இது போல செய்து பாருங்கள்.