இடா புயல் காரணமாக இதுவரை 82 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
கடந்த செப்டம்பர் 1 அன்று அமெரிக்காவில் உள்ள லூசியானா மாநிலத்தை இடா புயல் தாக்கியது. இந்த புயலின் தாக்கத்தால் வீடுகள், நகரங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. இந்த புயலின் தாக்கத்திற்கு பின்னர் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் கனமழை பெய்ததால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலைகள், சுரங்கப்பாதைகள், ரயில்வே நிலையங்கள் ஆகியவை வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனால் வீட்டை விட்டு வெளியேறாமல் மக்கள் வீடுகளிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், நியூயார்க் நகரில் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 82 பேர் உயிரிழந்துள்ளதாக நியூயார்க் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதுவரை 6 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்கள் இந்த வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளது. இதனை அடுத்து மீட்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…