உலக நாடுகளுக்கு இடையிலான பிரட்சனைகளை தீர்ப்பதில் தி ஹோக் நகரில் உள்ள பன்னாட்டு நீதிமன்றம் ஐநாவால் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் நம் அண்டை நாடான மியான்மரைப் பூர்வீகமாகக் கொண்ட ரோஹிங்யா முஸ்லிம்கள், மியான்மரின் ரகைன் மாகாணத்தில் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இவர்கள் அந்த நாட்டு ராணுவத்தால் இனப்படுகொலை செய்யப்படுவதாக சர்வதேச அளவில் புகார்கள் எழுந்தது.
இதனை தடுத்திட கோரி சர்வதேச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் , 2019-ம் ஆண்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.சர்வதேச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான 17 நீதிபதிகள் நேற்று அளித்த தீர்ப்பு, ரோஹிங்யாக்களை மியான்மர் அரசு இனப்படுக்கொலை செய்யக்கூடாது என்றும், அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து தர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆதாரங்களை மியான்மர் பாதுகாக்க வேண்டும் என்றும், அத்துடன் ரோஹிங்கியாக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து பன்னாட்டு நீதிமன்றத்திற்க்கு அறிக்கைகளை வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். சர்வதேச கோர்ட் உத்தரவை ஐ.நா. மனித உரிமை அமைப்பின் நிபுணர்கள் வரவேற்றுள்ளனர். மியான்மரில் ராணுவ ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த ஆங் சாங் சூகிக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசு ரோஹிங்யா விவகாரத்தால் பறிக்கப்பட்டது என்பது நினைவு கூறத்தக்கது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…