ICC கனவு அணிக்கு தமிழச்சி நம்ம மிதாலிராஜ் தான் கேப்டன்…!

Default Image
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்தது. இதில் சொந்த மண்ணில் உலகக் கோப்பையை கைப்பற்றி இங்கிலாந்து அணி சாதனை படைத்தது. இந்திய அணி 2-ஆம் இடம் பிடித்தது.
இந்நிலையில், நடப்பு போட்டித் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீராங்கனைகளைக் கொண்டு மகளிர் உலகக் கோப்பை 2017 கனவு அணியை சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் (ஐசிசி) திங்கட்கிழமை அறிவித்தது.
12 பேர் கொண்ட இந்த அணிக்கு இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கனவு அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதில், இங்கிலாந்து அணியில் இருந்து அதிகபட்சமாக 5 வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். இதல் 4 பேர் ஆடும் லெவனிலும் ஒருவர் 12-ஆவது வீராங்கனையாகவும் தேர்வாகியுள்ளனர்.
அடுத்தபடியாக இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளில் இருந்து தலா 3 வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர். தவிர ஆஸ்திரேலியாவில் இருந்து ஒரு வீராங்கனை தேர்வு செய்யப்பட்டார்.
இதில், மித்தாலி ராஜ் (இந்தியா), சாரா டெய்லர் (இங்கிலாந்து), ஆனி ஷ்ருப்ஸோல் (இங்கிலாந்து) ஆகியோர் 2-ஆவது முறையாக ஐசிசி உலகக் கோப்பை கனவு அணியில் இடம்பெறுகின்றனர்.
இந்த கனவு அணி 5 பேர் கொண்ட குழுவால் தேர்வுசெய்யப்பட்டுள்ளது. அவர்களின் விவரம் பின்வருமாறு:
ஜெஃப் ஆலர்டைஸ் (ஐசிசி பொது மேலாளர்- கிரிக்கெட் மற்றும் போட்டிக்கான நிர்வாகக் குழுத் தலைவர்)
இயன் பிஷப் (முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் வேகப்பந்து வீச்சாளர்)
சாரோலேட் எட்வர்ட்ஸ் (முன்னாள் இங்கிலாந்து மகளிர் அணி கேப்டன்)
ஸ்நேகல் ப்ரதான் (முன்னாள் இந்திய வீராங்கனை மற்றும் பத்திரிகையாளர்)
லிஸா ஸ்தாலேகர் (முன்னாள் ஆஸ்திரேலிய மகளிர் அணி ஆல்-ரவுண்டர்)
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2017 கனவு அணி விவரம் பின்வருமாறு:
டஸ்மின் பீமௌன்ட் (இங்கிலாந்து)
லௌரா வோல்வார்ட் (தென் ஆப்பிரிக்கா)
மிதாலி ராஜ் (கேப்டன், இந்தியா)
எல்லீஸ் பெர்ரி (ஆஸ்திரேலியா)
சாரா டெய்லர் (விக்கெட் கீப்பர், இங்கிலாந்து)
ஹர்மான்ப்ரீத் கௌர் (இந்தியா)
தீப்தி ஷர்மா (இந்தியா)
மரிசேன் காப் (தென் ஆப்பிரிக்கா)
டேன் வேன் நீய்கெர்க் (தென் ஆப்பிரிக்கா)
ஆனி ஷ்ருப்ஸோல் (இங்கிலாந்து)
அலெக்ஸ் ஹார்ட்லி (இங்கிலாந்து)
நடாலி ஸீவர் (12-ஆவது நபர், இங்கிலாந்து)
Posted in UncategorizedTagged

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்