ஷார்ஜா வாரியர்ஸ் , துபாய் ஸ்டார் அணிக்கும் இடையே நடந்த போட்டியில் மேட்ச் பிக்சிங்! தொடரும் அவலம் …..
ஷார்ஜா வாரியர்ஸ் அணிக்கும், துபாய் ஸ்டார் அணிக்கும் இடையில் நடைபெற்ற டி20 போட்டியில் கடுமையான மேட்ச் பிக்சிங் இருப்பதாக எழுந்த ஐயத்தில் யுஏஇ-யில் ஆல்டைம் அஜ்மன் லீக் என்ற தனியார் லீக் போட்டியில் ஐசிசி ஊழல் தடுப்பு அமைப்பு விசாரணையில் இறங்கியுள்ளது.
கன்னாபின்னாவென்று வீரர்கள் ரன் அவுட் ஆவதும் ஸ்டம்பிங் ஆவதும் தாறுமாறாக ரன்களுக்கு ஓடுவதும் அடங்கிய இந்தப் போட்டியின் வீடியோ வைரலாக ஐசிசி உஷாரானது.
மைதான அதிகாரிகளே அஜ்மன் ஓவல் மைதானத்தில் இனி போட்டி நடக்கக் கூடாது என்று நிறுத்தி விட்டனர். ஆனால் நடந்து முடிந்த இந்தப் போட்டியில் 136 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து துபாய் ஸ்டார் அணி ஷார்ஜா வாரியர்ஸ் அணி நிர்ணயித்த 136 ரன்கள் இலக்கை எதிர்த்து ஆடியது.
ஆனால் தொடர்ந்து கேலிக்கூத்தான வகையில் ‘வேண்டுமென்றே’ ஆட்டமிழக்கும் வகையில் அடுத்தடுத்து காமெடியாக அவுட் ஆகிச் சென்றனர். 46 ரன்களுக்குச் சுருண்டனர்.
அதாவது மேலேறி வந்து ஆடுவது, பந்தை விடுவது திரும்பவும் கிரீசிற்குள் வர முயற்சி செய்யாமலேயே வெளியேறுவது, ரன் ஓடும்போது கபடி கபடி ஆடி ரன் அவுட் ஆவது. விக்கெட் கீப்பர் பந்தை சரியாக சேகரிக்காத போதும் கிரீஸிற்குள் வர முயலாமல் அவுட் ஆவது, ஒருகட்டத்தில் இவ்வாறு அவுட் ஆக பீல்டர் ஒத்துழைக்காத காமெடியும் நிகழ்ந்தது.
இந்தப் போட்டியின் வீடியோ யூடியூபில் வெளியாகி வைரலாகியுள்ளது. வீரர்கள் பலர் இந்த வீடியோவை தங்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டு அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.