கோடி ரூபாய் கொடுத்தால் கூட இப்படி நான் நடிக்க மாட்டேன் – நடிகர் கார்த்தி ஓபன்
கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தாலும் புகைபிடிக்கும் காட்சிகளை நடிக்க மாட்டேன் என்று கார்த்தி கூறியிருக்கிறார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்தி சில படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் சமீபத்தில் சுல்தான் படம் வெளியானது. இந்த திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தகுந்த வசூலையும் கொடுத்தது.
இந்நிலையில், கார்த்தி பல படங்கள் நடித்திருந்தாலும் மாஸ் காட்டுவதற்காக எடுக்கப்படும் புகை பிடிக்கும் சீன்களை தவிர்த்து வருகிறார். கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தாலும் புகைபிடிக்கும் காட்சிகளை நடிக்க மாட்டேன் என்று கார்த்தி கூறியிருக்கிறார். நான் படத்தில் புகைபிடிப்பதை பார்த்து ரசிகர்கள் நிஜத்தில் செய்வார்கள். ரசிகர்கள் கெட்டுப் போக நானே காரணமாக இருக்க மாட்டேன் என கார்த்தி கூறியுள்ளார்.