ஜனநாயகம் மற்றும் அமெரிக்காவை காக்க பாடுபடப்போகிறேன் – ஜோ பைடன் உறுதி
அமைதி பாதுகாப்பு வளத்திற்கான நல்ல நண்பனாக அமெரிக்கா விளங்கும் என்று தற்போது அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள பைடன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜோ பைடன் அவர்கள் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் பைடனின் வெற்றியை ஏற்க மறுத்த டிரம்ப் அவர்கள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டார். ஆனாலும் அவர் தோல்வியைத் தழுவினார். இந்நிலையில் நேற்று அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன் அவர்கள் கூறுகையில், புதிய வரலாறு படைப்போம் என தனது முதல் உரையை தொடங்கினார்.
இவர் பதவியேற்ற முதல் நாளிலேயே பல அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அரசியல் தீவிரவாதத்தை முறியடிக்க வேண்டும் என்றும், அமெரிக்கா பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் மீண்டும் இணைவதற்கான உத்தரவு, அமெரிக்காவில் இன சமத்துவத்தை உறுதி செய்யும் வகையிலான உத்தரவு போன்ற உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், அமெரிக்காவின் சர்வதேச கூட்டணிகளை சரி செய்வோம் எனவும், அமைதி பாதுகாப்பு வளத்திற்கான நல்ல நண்பனாக அமெரிக்கா விளங்கும் என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் உள்நாட்டு பயங்கரவாதம் வெள்ளை இன வாதம் போன்ற போன்றவற்றை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்றும், அமெரிக்காவில் ஜனநாயகம் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது என்றும் தெரிவித்த அவர், அரசியலமைப்பு சட்டம், ஜனநாயகம் மற்றும் அமெரிக்காவை காக்கப் பாடுபட போகிறேன் என்றும், தற்போது அதிபராக பொறுப்பேற்றுள்ள அதிபர் ஜோ பைடன் அவர்கள் உறுதி அளித்துள்ளார்.