இனி வருடத்திற்கு ஒரு படம் தான் நடிப்பேன்! பிரபல நகைசுவை நடிகர் அதிரடி!

- இனிமேல் இரவு-பகலாக நடிப்பதில்லை.
- கதையின் நாயகனாக வருடத்துக்கு ஒரு படம் நடிப்பேன்.
தமிழ் சினிமாவின் பிரபலமான நகைசுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் யோகிபாபு. இவர் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் கைவசம் 16 படங்கள் உள்ள நிலையில், இவர் ஒரு நாள் சம்பளமாக ரூ.5 லட்சம் வாங்குகிறாராம்.
இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், திரையுலகுக்கு நான் அறிமுகமாகி, நகைச்சுவை நடிகராக பிரபலமானதும் தொடர்ந்து இரவு-பகல் பார்க்காமல் வேலை செய்தேன். இதனால் என் தூக்கம் போனது. களைப்பாக உணர்ந்தேன். கண்கள் தூக்கத்துக்கு ஏங்கின. இதனால் தனது உடல் நலம் பெரிதளவில் பாதிக்கப்பட்டது என கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இனிமேல் இரவு-பகலாக நடிப்பதில்லை. கதாநாயகனாக அல்ல, கதையின் நாயகனாக வருடத்துக்கு ஒரு படம் நடிப்பேன். மற்ற படங்களில், நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிப்பேன்’’ என கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025