திருமணத்தை யாருக்கும் சொல்ல மாட்டேன் – நடிகை நயன்தாரா.!

Default Image

திருமணத்தை யாருக்கும் சொல்ல மாட்டேன் என்று நடிகை நயன்தாரா கூறியுள்ளார். 

கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான காதல் ஜோடிகளாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை கூறலாம். 2015 ஆம் ஆண்டு வெளியான நானும் ரவுடி தான் படத்தின் மூலம் தான் இவர்கள் இருவரின் காதல் ஆரம்பித்தது என்பது அனைவரும் அறிந்ததே. லிவ்விங் ரிலேஷன் சிப்பில் இருக்கும் இவர்கள் வழக்கமாக இருவரும் இணைந்துள்ள புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார் விக்னேஷ் சிவன்.

பொதுவாக எந்த ஒரு பேட்டியிலும் கலந்து கொள்ளாத நயன்தாரா  நெற்றிக்கண் திரைப்படத்தின் ப்ரமோஷனுக்காக விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய டிடி நயன்தாராவிடம் சில கேள்விகளை கேட்டார்.

அப்போது விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படம் குறித்து கேட்டதற்கு இருவருக்கும் நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது என கூறியுள்ளார். நீங்கள் திருமணம் செய்துகொள்வீர்களா..? லிவிங் டு கெதர் வாழ்க்கையா..? என்று கேட்டதற்கு நயன்தாரா ” திருமணம் செய்து கொள்வேன் ஆனால் திருமணத்தை யாருக்கும் சொல்ல மாட்டேன். திருமணம் முடிந்த பிறகே அதனை அறிவிப்பேன்” என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live
INDvNZ - ICC CT 2025 Final
Rain update
Champions trophy 2025 Final prayers
Tamilnadu CM MK Stalin
ICC CT 2025 - IND vs NZ
ilaiyaraaja symphony london