நான் கொரோனா தடுப்பூசியை போடமாட்டேன் எனவும், அது எனது உரிமை என பிரேசில் நாட்டு அதிபர் போல்சோனாரோ தெரிவித்துள்ளார்.
உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா பரவலை தடுக்க தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் நோக்கில் உலகளவில் பல நாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்தியா, அமெரிக்கா உட்பட நாடுகள் தீவிரமடைந்துள்ளது. தடுப்பூசி முழுமையாக கண்டுபிடிக்கப்பட்ட பின், அதனை மக்களுக்கு செலுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கொரோனா பாதிப்பில் உலகளவில் இரண்டாம் இடத்தில் இருக்கும் பிரேசிலில் இதுவரை 62,38,350 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 1,71,998 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்காரணமாக அந்நாட்டு மக்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரமாக பின்பற்றி வருகின்றனர். இந்தநிலையில், பிரேசில் அதிபர் ஜேயிர் போல்சோனாரோ, நான் கொரோனா தடுப்பூசியை போடமாட்டேன் எனவும், அது எனது உரிமை என ஒரு உரையாடலின் போது தெரிவித்துள்ளார். அதிபரின் இந்த பேச்சு, சர்ச்சையானது.
அதிபர் போல்சோனாரோ, கொரோனா வைரஸ் ஒரு சிறிய காய்ச்சல்தான். அதற்கு ஊரடங்கு தேவையில்லை என பேசியது, உலகளவில் சர்ச்சையானது. அதனைதொடர்ந்து அவர், பொது இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணியாமல் செல்வார். இதன்காரணமாக அவருக்கு கடந்த ஜூலை 10-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, ஜூலை 25-ம் தேதி நடத்தப்பட்ட 4-வது பரிசோதனையில், அவருக்கு கொரோனா நெகட்டிவ் என வந்ததையடுத்து, கொரோனா பாதிப்பில் இருந்து முற்றிலுமாக குணமடைந்தார்.
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 4% கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, குமரிக்கடல்…
சென்னை ;சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 18] எபிசோடில் மீனா மீது கரிசனம் காட்டுகிறார் விஜயா.. போட்டோசூட்டினால் வந்த பிரச்சனை…
சென்னை : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் என்பது வரும் நவ-24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நேற்று விலகிய டெல்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் தன்னை இணைத்து…
திருச்சி : நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாயச் சங்கங்கள் சார்பில்…
சென்னை : 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் தவெக கூட்டணி என பரவி வந்த செய்தியை அக்கட்சியின் பொதுச் செயலாளர்…