பிக்பாஸ் – 4 குறித்து வீடியோ ஒன்றினை உலகநாயகன் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 4 விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை. சமீபத்தில் கூட உலகநாயகன் கமல்ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டு வைரலானது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் பிக்பாஸ் சீசன் 4 வரும் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் தற்போது உலகநாயகன் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘சொன்னபடி கேளு, சொல்லறது பாஸ்’ உங்கள் நான் என்ற பதிவுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த வீடியோவில் கொரோனா விதிமுறைகளை மீறுவதை குறித்து நகைச்சுவையுடன் சில காட்சிகளும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் தோன்றும் சில காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. மேலும் மூன்று வருடங்களாக பரிட்சியமான இந்த குரல் தற்போது உங்களுக்குள்ளே ஒலிக்க ஆரம்பித்து விட்டது, தப்பு என்றால் தட்டி கேட்பேன், நல்லது என்றால் தட்டி கொடுப்பேன் என்ற கமல் கூறுவதும் இடம்பெற்றுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…
சென்னை : நாதகவில் இருந்து சமீபத்தில் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குற்றச்சாட்டுகளை…
சென்னை : தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, …
சென்னை : சின்னத்திரையில் இருந்து இப்போது முன்னணி நடிகராக வளர்ந்து இருக்கும் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பலருக்கும் முன் உதாரணமாக இருந்து வருகிறது.…
நடப்பாண்டு சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நியூசிலாந்து அணிக்கு…
சென்னை : திமுகவினர் பல்வேறு இடங்களில் மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதாக குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக…