பெண்களுக்கு ஒண்ணுன்னா முதல்ல நான் குரல் கொடுப்பேன்! STR அதிரடி!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
பெண்களுக்கு ஒண்ணுன்னா முதல்ல நான் குரல் கொடுப்பேன்.
நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவர் காதல் அழிவதில்லை என்ற படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது இவர் மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இவர் திருச்சியில் நடந்த கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தான் ஏன் பெண்களிடம் கோபமாக நடந்து கொள்கிறேன் என விளக்கம் அளித்துள்ளார். அப்போது பெண்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதலில் குரல் கொடுப்பேன் எனக் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், தான் தொடர்ந்து படம் நடிக்காமல் இருந்ததற்கு சிலரது சதி தான் காரணம் என்றும், தன்னை எழுந்திருக்க விடாமல் தடுப்பதாகவும், அதனை மீறி தான் தற்போது வெளியில் வந்திருப்பதாகவும் கூறியுள்ளார்.