நான் 4 அல்ல, 40 திருமணம் கூட செய்து கொள்வேன் என்று நடிகை வனிதா தெரிவித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமாகியவர் வனிதா. இதன் பிறகு முன்னணி சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கு கொண்டு அந்நிகழ்ச்சியின் முதலிடத்தை வெற்றிபெற்றார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் நடந்து கொண்டிருக்கும் பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார்.
இதில் மற்றவர்களுடன் ஒப்பிடுவதை தாங்க முடியாமல் அந்நிகழ்ச்சியின் நடுவரான ரம்யா கிருஷ்ணனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவ்விடத்தை விட்டு வெளியேறுகிறார். இதன் முழுப்பகுதி வரும் ஞாயிற்றுகிழமை வெளியாக உள்ளது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்துகொண்டார். பல பிரச்சனைகளுக்கு பின்னர் அவரை விட்டு பிரிந்துவிட்டார்.
மேலும், தற்போது இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனுடன் மாலையும் கழுத்துமாக இருக்க கூடிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். ஏற்கனவே ஜோதிடர் ஒருவர் வனிதாவின் ஜாதகத்தில் இன்னும் திருமண யோகம் இருப்பதாக தெரிவித்திருந்தார். அதிலும் எஸ் என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் பெயர் உள்ள நபருடன் நடக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் வனிதா பவர் ஸ்டார் உடன் மணக்கோலத்தில் உள்ள புகைப்படத்தை வெளியிட்டது சமூக வலைத்தளத்தில் பேசும்பொருளாக மாறியுள்ளது. நான்காவது திருமணம் செய்துகொண்டாரா? இல்லை ஏதும் படப்பிடிப்புகளுக்காக எடுக்கப்பட்டதா? என்று தெரியாமல் பலரும் அவர்களது கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை வனிதா செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘இந்த புகைப்படம் பவர்ஸ்டார் சீனிவாசன் இயக்கத்தில் நடிக்கவுள்ள பிக்கப் டிராப் படத்தின் படப்பிடிப்புக்காக எடுக்கப்பட்ட புகைப்படங்கள். மேலும் நான் 4 அல்ல, 40 திருமணங்கள் கூட செய்துகொள்வேன். அது என் உரிமை. பெண்களுக்கு அவரவர் வாழ்க்கையில் தனிப்பட்ட சுதந்திரம் தேவை.
அது கிடைக்காமல் போகும்போது தான் பெண் தற்கொலைகள் நிகழ்கிறது. தனக்கு இப்போதைக்கு திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இல்லை’ என்றும் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து பவர்ஸ்டார் சீனிவாசன் கூறியிருப்பதாவது, ‘இந்த சமூகத்தில் 90 சதவீதம் பெண்கள் எந்தவொரு விஷயத்தையும் வெளியில் சொல்லாமல் வாழ்கிறார்கள். உண்மையில் நடிகை வனிதா ஒரு இரும்பு பெண்மணி’ என்று கூறியுள்ளார்.
ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,…
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு…
டெல்லி : நேற்று ( ஏப்ரல் 22) காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம்…
புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும்…
டெல்லி : நேற்று (ஏப்ரல் 22) பிற்பகல் 3 மணியளவில் ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில், பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில்…