‘தற்கொலை செய்து கொள்வேன்’ – இங்கிலாந்து பிரதமருக்கு மெயில் அனுப்பிய பெண்!

Default Image

இங்கிலாந்து பிரதமருக்கு மெயில் அனுப்பிய பெண்.

இந்திய தலைநகர் டெல்லியில் வசித்து வரும் 43 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், இரண்டு நாட்களுக்கு முன்பதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு  அவசர உதவி வேண்டி மெயில் செய்துள்ளார். அந்த தகவலில், அடுத்து இரண்டு மணி நேரத்துக்குள் எனக்கு உதவி கிடைக்கவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, அந்த தகவலை பிரதமரின் உதவியாளர் ஒருவர் பார்த்தவுடன் லண்டனிலுள்ள இந்திய தூதரகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக தூதரக அதிகாரிகள் வெளியுறவுத் துறை அமைச்சகத்தை தொடர்புகொண்டு விவரத்தை தெரிவித்துள்ளனர். அதன்படி அந்த பெண் ஈ-மெயில் குறிப்பிட்டிருந்த டெல்லியன்  ரோகிணி பகுதி காவல் நிலைய அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

அந்த பெண் அவரது முகவரியை சரிவர சொல்லாமல் இருந்ததால் நள்ளிரவு நேரம் என்றும் பாராமல் அதிகாரிகள் வீடு வீடாக சோதனை செய்தனர்.  சுமார் 2 மணிநேர தேடுதலுக்கு பின் அந்த பெண்ணின் வீட்டை அடைந்து உள்ளனர். அவர்கள் அங்கு சென்றபோது அந்த வீடு அலங்கோலமாக இருந்துள்ளது. பூனைகள் அங்கும் இங்கும் உலாவிக் கொண்டிருந்தன.

அந்த பெண்ணை பார்த்தால் குளித்தே பல நாட்கள் இருக்கும் என்பதை அறிந்து கொண்டனர். வீடு முழுவதும் துர்நாற்றம் வீசியது. எங்களது முதற்கட்ட விசாரணையில், அவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தவர் என்பதும், தற்போது நிதி சிக்கலில் தவித்து வருகிறார் என்பதையும் அறிந்து கொண்ட  அதிகாரிகள், அவரது மன நல மருத்துவர்கள் ஆலோசனை கொடுத்து வருகின்றனர் என போலீசார்  தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்