பரபர ஷுட்டிங்கில் “நானே வருவேன்”.! விரைவில் அப்டேட்.!

Default Image

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “நானே வருவேன்”. இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை இந்துஜா நடித்து வருகிறார். இயக்குனர் செல்வராகவனும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்து வருகிறார். இதற்கு முன்பு தனுஷ் -செல்வராகவன்-யுவன் கூட்டணியில் வெளியான துள்ளுவதோ இளமை. காதல்கொண்டேன், புதுப்பேட்டை ஆகிய படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. மீண்டும் நானே வருவேன் படத்தில் இந்த கூட்டணி இணைந்துள்ளதால் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு மிக அதிகமாகவுள்ளது.

இந்நிலையில், தற்போது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக முழுவீச்சில் நடைபெற்று வருகிறது, படப்பிடிப்பின் போது ரசிகர் ஒருவர் தனுஷுடன் எடுத்த புகைபடம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இன்னும் சில நாட்களில் இந்த திரைப்படத்தின் புதிய அப்டேட் அறிவிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அது படம் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பாக இருக்கலாம் அல்லது படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதியாக இருக்கலாம்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்