அஜித்தை நான் அப்பான்னு தான் கூப்பிடுவேன் – அனிகா.!!
அஜித்தை தான் அப்பா என்று தான் கூப்பிடுவேன் என்று நடிகை அனிகா சுரேந்திரன் கூறியுள்ளார்.
நடிகை அனிகா சுரேந்திரன் நடிகர் அஜித்துடன் என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களிலில் அவருக்கு மகளாக நடித்தார். அஜித்துடன் நடித்த அனுபவங்கள் குறித்து சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றி சில விசயங்களை கூறியுள்ளார். இதில் அவர் கூறியது ” அஜித் சாருடன் இரண்டு படங்கள் நடித்தேன் படப்பிடிப்பு நடக்கும்போது அஜித் சார் எனக்கும் உதவி பண்ணுவார் தமிழ் டயலாக் பேசறப்ப எந்த மாதிரி பேசணும் என்றும் எப்படி உச்சரிக்க வேண்டும் என்றும் சொல்லிக்கொடுத்தார்.
நான் அதிகமா பேசினது உணவுகளைப் பற்றி தான் “என்னை அறிந்தால்” படத்தில் இடம்பெற்ற உனக்கு என்ன வேணும் பாடலின் படப்பிடிப்பு போது பல இடங்களில் ஷூட்டிங் நடைபெற்றது. அப்போது இந்தியா முழுக்க பத்து நாட்கள் சுற்றி வர வாய்ப்பு கிடைத்தது. வயல்வெளி, பாலைவனம், நகரம் என்று நானும் அஜித் சாரும் அப்பா மகள் போல சுற்றிக் கொண்டே இருந்தோம்.
அதைப்போல் விஸ்வாசம் திரைப்படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாட்டு இப்போது டிவியில் நான் பார்த்தாலும் எனக்கு மிகவும் சிலிர்ப்பாக இருக்கும். நான் அஜித் சாரை அப்பான்னு தான் கூப்பிடுவேன் என்று கூறியுள்ளார்.